News May 16, 2024
இலங்கையிலும் இனி Phonepe பயன்படுத்தலாம்

இந்தியாவின் Fintech நிறுவனமான Phonepe UPI, இலங்கையில் தனது கிளையை தொடங்கியுள்ளது. Phonepe நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதால், பயனர்கள் இனி QR code பயன்படுத்தி UPI பரிவர்த்தனை செய்ய முடியும். இது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Similar News
News December 1, 2025
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிச.19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பொதுப் பயன்பாட்டுக்கான அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிப்பது, இந்திய உயர்கல்வி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட 14 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் SIR பணிகள், டெல்லி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
News December 1, 2025
ரெப்போ விகிதம் மேலும் குறைகிறது?

ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி, மேலும் 25பிபிஎஸ் குறைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ரெப்போ விகிதம் 5.5% உள்ளது. டிச.3 முதல் டிச.5 வரை நடைபெறும் RBI-ன் நிதிக்கொள்கை கமிட்டி கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்படவுள்ளது. பணவீக்க அழுத்தங்கள் தணிந்துள்ளதால் இந்த குறைப்பு இருக்கலாம். அதேநேரத்தில் 2-வது காலாண்டில் நாட்டின் GDP 8.2% உயர்ந்திருப்பதால் மாற்றம் இல்லாமலும் போக வாய்ப்புள்ளது.
News December 1, 2025
காப்பீடு துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு

காப்பீடு துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் FM நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். தற்போதைய நிலையில் 74% வரை அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி இருக்கிறது. அந்தவகையில் 82,000 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட உள்ளது. மேலும், மத்திய அரசின் புதிய தலைமுறை நிதி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக 100% முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.


