News October 7, 2025
இன்ஸ்டாவில் இனி லொகேஷன் ஷேர் பண்ணலாம்

Snapchat-ஐ போல இனி இன்ஸ்டாவிலும் லொகேஷனை நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம். குறிப்பிட்ட friends Group-ல் லொகேஷனை ஷேர் செய்வது மட்டுமின்றி, தேவையில்லாத நேரத்தில் ஆஃப் செய்தும் கொள்ளலாம். இந்த Instagram map அப்டேட் ஆகஸ்ட் மாதத்திலேயே USA, கனடாவில் வந்துவிட்டது. இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் இது நடைமுறைக்கு வந்துள்ளது. Andriod, iOS என அனைத்திலும் இந்த அப்டேட்டை இன்ஸ்டா பயனர்கள் யூஸ் பண்ணலாம்.
Similar News
News October 7, 2025
குறையும் இல்லை, இனி ஓய்வும் இல்லை: ராமதாஸ்

உடல்நலக் குறைவால் கடந்த 3 நாள்களாக சென்னை அப்போலோவில் சிகிச்சையில் இருந்தார் ராமதாஸ். CM ஸ்டாலின், DCM உதயநிதி ஸ்டாலின், EPS, சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில், இன்று மாலை அவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தனக்கு குறையேதும் இல்லை என டாக்டர்கள் கூறியுள்ளதாகவும், இனி ஓய்வும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News October 7, 2025
கதை சொல்லும் ₹2 காயின்

நமது ₹2 நாணயங்களில் என்ன கதை இருக்கிறது தெரியுமா? முத்திரை, சின்னம் என ஒவ்வொரு வடிவமைப்பிலும் ஒரு கதை இருக்கு. மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும். இந்த கதையை, உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. இதுபோன்று, வேறு ஏதேனும் கதை வேண்டுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 7, 2025
விரைவில் 2,708 உதவி பேராசிரியர்கள் நியமனம்

விரைவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது நிரந்தர பணியிடங்கள் என்ற அவர், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளில் 37 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கியுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.