News April 23, 2025
லாக்-இன் பண்ணாமல் இனி வரித்தாக்கல் செய்யலாம்

பயனர் ஐடி, கடவுச்சொல் இல்லாமல் இனி எளிதாக வரித்தாக்கல் செய்யலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது. இதன்படி, அதிகாரப்பூர்வ e-filing இணையதளத்தில் உள்ள ‘e-Pay Tax’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, பான் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் உள்ளிட்டு வரித்தாக்கல் செய்யலாம் எனவும், இதனால் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை என CBDT விளக்கம் அளித்துள்ளது.
Similar News
News October 28, 2025
விஷ்ணு விஷாலின் நிறைவேறாத ஆசை

நடிகர் விஷ்ணு விஷால் ‘ஆர்யன்’ பட புரமோஷனில் பிஸியாக உள்ளார். இதனிடையே பேட்டி ஒன்றில் தனது நிறைவேறாத ஆசையைப் பற்றி மனம் திறந்துள்ளார். தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படத்தை இயக்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் ஆசைப்பட்டதாகவும், ஆனால் அதற்கு முன் மின்னல் முரளி, லோகா உள்ளிட்ட மலையாளப் படங்கள் வெளியாகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
News October 28, 2025
துணை ஜனாதிபதியாக சொந்த மண்ணில் கால்பதித்த CPR

துணை ஜனாதிபதியாக தேர்வான பிறகு முதல்முறையாக தனது சொந்த மண்ணான கோவைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் சென்றுள்ளார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர்கள் சாமிநாதன், முத்துசாமி ஆகியோர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், வியாழன் அன்று தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்கிறார். அன்றைய தினமே மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
News October 28, 2025
ஷ்ரேயஸ் உடல்நிலை குறித்து சூர்யகுமார் கொடுத்த அப்டேட்

<<18116578>>ஷ்ரேயஸ் உடல்நிலை<<>> சீராக உள்ளதாக டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும், மெசேஜ்களுக்கு ரிப்ளை செய்வதாகவும் சூர்யா கூறியுள்ளார். உடலில் நல்ல முன்னேற்றமடைந்தாலும், இன்னும் சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் அவர் இருப்பார் எனவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். இதனால் விரைவில் ஷ்ரேயஸ் டிஸ்சார்ஜ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


