News April 26, 2024
UTS செயலியில் இனி வீட்டில் இருந்து டிக்கெட் எடுக்கலாம்

ரயில் நிலைய கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், UTS செயலி மூலம் முன்பதிவில்லாத ரயில், நடைமேடை மற்றும் சீசன் டிக்கெட் ஆகியவற்றை பெற முடியும். அதில் ஜியோ ஃபென்சிங் எனப்படும் வெளிப்புற எல்லையை தற்போது ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது. இதனால் ரயில் நிலையம் தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், டிக்கெட் எடுத்த 2 மணி நேரத்திற்குள் பயணத்தை தொடங்க வேண்டும்.
Similar News
News March 9, 2026
OPS-ஐ அடித்து விரட்டிய ஜெ., ஆன்மா: EPS

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செல்லாக்காசுகள், திமுகவிடம் சரண் அடைந்துள்ளதாக OPS-ஐ EPS கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுகவுக்கு துரோகம் இழைத்தவர்களை எம்ஜிஆர், ஜெ.,வின் ஆன்மா விரட்டி அடித்துள்ளது என சாடிய அவர், ஆமை புகுந்த வீடு போல், OPS எங்கு சென்றாலும் அந்த கட்சிக்கு அதோகதிதான் என விமர்சித்தார். சுயநலவாதிகள் எந்த கட்சியில் இடம்பெற்றாலும் அக்கட்சி (DMK) அழிந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.
News March 9, 2026
இந்திய வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டம்!

மூன்றாவது முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தியா கோப்பையை வென்றதும் அதன் கொண்டாட்டம்<<19333207>> நாடு முழுவதும் எதிரொலித்தது.<<>> குறிப்பாக முக்கிய பங்கு வகித்த இந்திய அணி வீரர்கள் அகமதாபாத் மைதானத்திலேயே தங்களின் வெற்றியை உற்சாகமாக கோப்பையுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த மகிழ்ச்சியான தருணங்களை காண வலதுபக்கம் Swipe செய்து பாருங்கள்!
News March 9, 2026
விஜய்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை: வைகோ

திமுக வெற்றி முகத்தில் நின்றுகொண்டிருப்பதால் என்ன செய்வதென்று விஜய்க்கு தெரியவில்லை என வைகோ விமர்சித்துள்ளார். அதனால்தான் திமுக வெளியிட்ட அறிவிப்புகளையே விஜய்யும் வெளியிட்டிருக்கிறார் என்ற அவர், அந்த உரிமை அவரது கட்சிக்கு இருக்கிறது என்றார். மேலும், மற்ற கட்சியின் தேர்தல் அறிக்கையில் இல்லாத ஓரிரண்டு அறிவிப்புகளும் மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.


