News April 14, 2024
காப்பி அடித்து இனி திரைப்படங்கள் எடுக்க முடியாது

காப்பி அடித்து இனி படங்கள் எடுக்க முடியாதென நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய அவர், தற்போது ஓடிடி தளங்களில் அனைத்து படங்களையும் மக்கள் பார்த்து விடுகிறார்கள் என்றும், ஆதலால் முன்பு போல பிற படங்களை காப்பி அடித்து படங்கள் எடுக்க முடியாதென்றும் கூறினார். இதையும் மீறி காப்பி அடித்து படம் எடுத்தால், மக்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News October 17, 2025
குஜராத் அமைச்சரவை மாற்றப்பட்டது ஏன்?

செளராஷ்டிரா மக்களின் அதிருப்தியே, குஜராத் அமைச்சரவை மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். பாஜக தங்களை புறக்கணிப்பதாக செளராஷ்டிரா மக்கள் எண்ணியதை மாற்றும் வகையிலும், படேலின் OBC வாக்கு வங்கியை அதிகரிக்கவும் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது பாஜகவில் புதிதல்ல என்று கூறும் விமர்சகர்கள், 2001-ல் மோடி முதலமைச்சரானதும் இப்படித்தான் என்று கூறியுள்ளனர்.
News October 17, 2025
1 பைசா செலவில்லாமல் படிக்கணுமா?

IIT, IIMs போன்ற டாப் பல்கலை.,களில் வழங்கப்படும் ஆன்லைன் Course-கள் மத்திய அரசின் <
News October 17, 2025
புது ஜெர்சியில் இந்திய அணி வீரர்கள்!

இந்திய அணியின் ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து Dream 11 நீக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது அந்த இடத்தை Apollo Tyres பிடித்துள்ளது. புது ஜெர்சியில் இந்திய அணி வீரர்கள் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. ஒரு போட்டிக்கு சுமார் ₹4.5 கோடி என்ற விகிதத்தில், சுமார் ₹579.06 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. வரும் 2027 வரை இந்திய அணியின் ஸ்பான்ஸராக Apollo Tyres இருக்கும்.