News March 27, 2025
நெட் இல்லாமலும் UPI பரிவர்த்தனையை செய்யலாம்!

கடைக்கு சென்று ஏதாவது வாங்கிய பிறகு, திடீரென நெட் வேலை செய்யாது. கையிலும் பணம் இல்லாமல், தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாவோம். இனி, அந்த கவலை வேண்டாம். போனில் *99# என டயல் செய்யுங்கள். மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள பேங்கின் தகவல் வரும். அந்த மெனுவில் பணம் அனுப்ப, பேலன்ஸ் பார்க்க, பணம் பெற என்ற ஆப்ஷன்கள் வரும். பேங்க்கின் பின் நம்பரை போட்டு, பரிவர்த்தனைகளை எளிதாக செய்யலாம். SHARE IT.
Similar News
News September 16, 2025
நாய்க்கு ஆயுள் தண்டனை: உ.பி., அரசு உத்தரவு

தூண்டுதலின்றி மனிதர்களை கடிக்கும் தெருநாயை 10 நாள்கள் காப்பகத்தில் அடைக்க உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அதே நாய் மீண்டும் கடித்தால், அதன் வாழ்நாள் முழுவதும் காப்பகத்திலேயே ஆயுள் தண்டனை போல கழிக்க நேரிடும். இவ்வாறு வாழ்நாள் முழுவதும் அடைக்கப்படும் நாய்களை தத்தெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய் விவகாரம் தேசிய அளவில் விவாதமாகியுள்ள நிலையில், இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?
News September 16, 2025
மற்றவர்களுக்காக வாழும் மிடில் கிளாஸ் மக்கள்

மற்றவர்களுக்கு முன்பாக கெத்தாக தெரிய வேண்டும் என்பதற்காக *திருமணத்துக்காக ஒரே நாளில் ₹15 – ₹50 லட்சம் செலவு செய்கின்றனர் *3 மடங்கு விலையில் பிராண்ட் ஆடைகளை வாங்கி அணிவர் *ஒவ்வொரு 5-7 ஆண்டுகளுக்கு ஒருமுறை கார் மாற்றுகின்றனர் *மாத சம்பளம் எவ்வளவோ, அதற்கு இணையான (அ) அதிகமான பட்ஜெட் வைத்திருக்கின்றனர். இப்படி கெளரவத்துக்காக மிடில் கிளாஸ் மக்கள் செய்யும் வேறு செயல்கள் என்னென்ன? கமெண்ட் பண்ணுங்க.
News September 16, 2025
நாளை காலை 8 மணிக்கு தயாரா இருங்க!

<<17728231>>ஆயுதபூஜை, தீபாவளி<<>> பண்டிகையொட்டி சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களுக்கு நாளை காலை மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. சுமார் 2 மாதங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியானது. இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. IRCTC செல்போன் ஆப், IRCTC இணையதளத்தில் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். SHARE IT.