News February 8, 2025
ரீசார்ஜ் பண்ணாமலே போன் கால் செய்யலாம்.! சீக்ரெட் டிப்ஸ்
இதற்கு ஒரு சிம்பிள் & சீக்ரெட் டிப்ஸ் இருக்கு. ஆனால், இதற்கு ஒரே ஒரு கண்டிஷன் உங்கள் போனில் WiFi அழைப்பு வசதி இருக்க வேண்டும். அப்படி இருந்தால், போன் Settingsல் Network & Internet ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதில், SIM card & Mobile networkஐ தேர்ந்தெடுக்கவும். அதில் கீழே இருக்கும் WiFi calling dongleஐ கிளிக் செய்து, WiFi callingஐ ஆன் செய்து கொள்ளவும். அவ்வளவு தான். SHARE IT.
Similar News
News February 8, 2025
டெல்லி முடிவு INDIA அணிக்கான எச்சரிக்கை: பொன்முடி
டெல்லி தேர்தல் முடிவு INDIA கூட்டணிக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். எதிர்காலத்தில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற பாடத்தை தேர்தல் முடிவு கூறுவதாகவும், INDIA கூட்டணி தலைவர்களை அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி 4 ஆண்டு கால திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள மதிப்பெண் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News February 8, 2025
அரசு மருத்துவமனைக்கு போங்க: டி.இமான்
உங்களது பிள்ளைகளை ஒரு முறையாவது அரசு மருத்துவமனை வார்டுகளுக்கு கூட்டிக் கொண்டுபோய் காட்டுங்கள் என்று இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார். அப்போதுதான், மக்கள் உடல் நலக்குறைவால் எவ்வளவு சிரமப்படுகிறார்கள், நமது உடல் எவ்வளவு முக்கியம் என்பதை பிள்ளைகள் உணர்ந்து கொள்வார்கள் என்று அவர் கூறியுள்ளார். உடலை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News February 8, 2025
தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை
தைப்பூசம் தினமான பிப்ரவரி 11ஆம் தேதி அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசம் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று 2021ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் EPS சட்டம் இயற்றினார். அதன்படி, இந்தாண்டு வரும் செவ்வாய்க்கிழமை விடுமுறை வருகிறது. திங்கட்கிழமை விடுப்பு எடுத்து வார இறுதியுடன் தொடர் விடுமுறையை கொண்டாட சம்பளதாரர்கள் திட்டமிட்டுள்ளனர்.