News November 13, 2024
சிக்னல் இல்லாமலும் ஃபோன் பேசலாம், பணம் அனுப்பலாம்

BSNL நிறுவனம், Viasat என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து Satellite-to-Device என்ற புதிய சேவையை இன்று அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், அவசரகாலத்தில் அல்லது தொலைதூரத்தில் நெட்வொர்க் இல்லாத போதும், ஃபோன் பேசலாம். மேலும் SMS, UPI டிரான்சாக்ஷனும் செய்யமுடியும். இந்த சேவையை கஸ்டமர்கள் எவ்வாறு பெறுவது, இதற்கான பிளான்கள் தொடர்பாக விரைவில் BSNL அறிவிப்பு வெளியிடும். தயாராக இருங்க மக்களே!
Similar News
News August 14, 2025
நாளை வலுவடையும் காற்றழுத்தம்.. கவனமா இருங்க!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை வலுவடையும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவு 1 மணி வரை சென்னை, செ.பட்டு, தென்காசி, காஞ்சி, திருவள்ளூர், நெல்லை, கோவை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஆகஸ்ட் 19 வரை நீடிக்குமாம். அதனால், வெளியே செல்லும் போது குடையை மறக்க வேண்டாம். கவனமா இருங்க மக்களே..!
News August 13, 2025
இனி ₹15,000 தான்… பின்வாங்கிய ICICI

அண்மையில் மாதாந்திர மினிமம் பேலன்ஸை ICICI வங்கி ₹50,000-மாக உயர்த்தியது. இதற்கு பொதுமக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதை குறைப்பதாக வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, நகர்புற கிளைகளில் மினிமம் பேலன்ஸ் இனி ₹15,000 ஆகவும், செமி அர்பன் கிளைகளில் ₹7,500 மற்றும் கிராமப்புற கிளைகளில் ₹2,500 ஆக இருக்கும். தவறினால் ₹500 அல்லது பற்றாக்குறை தொகையில் 6% – இதில் குறைவான தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.
News August 13, 2025
கிச்சனில் அதிக நேரம் இருந்தால் கேன்சர் அபாயம்?

ஆண்களின் நோயாக கருதப்பட்ட நுரையீரல் கேன்சர், பெண்களை அதிகளவில் பாதிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வீட்டில் சமைக்கும் போது வரும் அதீத புகையால் பெண்கள் நுரையீரல் கேன்சருக்கு ஆளாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சமைக்கும்போது வெளியாகும் புகை உள்ளேயே சுற்றுவதால் மூச்சுத்திணறலில் தொடங்கி கேன்சர் வரை ஏற்படுமாம். இதனால் கிட்சன் காற்றோற்றமாக இருக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.