News February 8, 2025
ரீசார்ஜ் செய்யாமலேயே CALL பண்ணலாம் பாஸ்!

செல்போனில் ரீசார்ஜ் செய்யாமலேயே கால் செய்யும் வசதி இருப்பது பலருக்கு தெரிந்திருக்காது. ஒரு சிம்பிளான டிரிக்கின் மூலமாக WIFI-ஐ கனெக்ட் செய்தே நம்மால் கால் செய்ய முடியும். அதற்கு உங்கள் ஃபோனில் WIFI CALLING இருக்க வேண்டியது அவசியம். அப்படியிருந்தால், SETTINGS> NETWORK> INTERNET SETTINGS> SIM & MOBILE NETWORK> SIM> WIFI CALLING Toggle> activate என்ற முறையை பின்பற்றி கால் செய்யலாம். Share It.
Similar News
News April 28, 2025
கோடை விடுமுறையில் ஆதார் புதுப்பிப்பு: பள்ளிக்கல்வித்துறை

கோடை விடுமுறை காலத்தில் ஆதாரை புதுப்பிக்க மாணவர்களை வலியுறுத்த வேண்டுமென்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதாெடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் அருகிலுள்ள இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள், வட்டார வள அலுவலகங்களில் மாணவர்களின் ஆதாரை புதுப்பிக்க தலைமை ஆசிரியர்கள் மூலம் பெற்றோரிடம் வலியுறுத்த கேட்டுள்ளது.
News April 28, 2025
3 நாள்களில் 1 சவரன் தங்கம் ரூ.2,800 சரிவு

ஏப்.22-ல் <<16240956>>தங்கம்<<>> விலை 1 கிராம் ரூ.9,290ஆகவும், 1 சவரன் ரூ. 74,320ஆகவும் அதிகரித்தது. அதற்கடுத்து 23, 24-ம் தேதிகளில் 1 கிராம் தங்கம் ரூ.285-ம், 1 சவரன் ரூ.2,280-ம் குறைந்தது. அதன்பிறகு 3 நாள்களாக விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று கிராமுக்கு ரூ.65-ம், சவரனுக்கு ரூ.520-ம் குறைந்துள்ளது. அதாவது, 3 நாள்களில் 1 கிராம் 350-ம், 1 சவரன் ரூ.2,800-ம் வீழ்ச்சியடைந்துள்ளது.
News April 28, 2025
IPL வரலாற்றை மாற்றி எழுதிய புவனேஷ்வர் குமார்!

RCB பவுலர் புவனேஷ்வர் குமார், நேற்று 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம், IPL-ல் அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். புவனேஷ்வர் குமார் 185 மேட்சில், 193 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் 214 விக்கெட்டுகளுடன் யுஸ்வேந்திர சாஹல் இருக்கிறார். சாஹலை முந்துவாரா புவனேஷ்வர் குமார்?