News July 7, 2025
PF பண இருப்பை ஈசியாக அறியலாம்..!

உங்கள் PF இருப்பை SMS மூலம் சரிபார்க்க, உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு “EPFOHO UAN TAM” என்ற வடிவத்தில் ஒரு செய்தியை அனுப்பவும். UAN என்ற இடத்தில் உங்களுக்கான யுனிவர்சல் கணக்கு எண்ணை பதிவிட வேண்டும். TAM என்பது தமிழ்நாட்டை குறிக்கும். Try பண்ணி பாருங்க மக்களே..
Similar News
News July 8, 2025
திமுக கூட்டணியில் தேமுதிக?

2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மாநிலங்களவை எம்.பி பதவியை அதிமுக தராததால் அதிருப்தியில் தேமுதிக இருப்பதாகவும், ஆகையால் கட்சியின் எதிர்காலம் கருதி திமுக கூட்டணியில் இடம்பெற பேச்சுகள் நடைபெறுவதாக தகவல்கள் உள்ளன. அதேசமயம் 5 சட்டமன்ற தொகுதிகளை தேமுதிக கேட்பதாகவும், அதனை தருவதற்கு திமுக தலைமையும் தயாராக இல்லை என கூறப்படுகிறது.
News July 8, 2025
டிமான்டி காலனி 3ம் பாகம் படப்பிடிப்பு துவக்கம்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவான டிமான்டி காலனி 1 மற்றும் 2 பாகங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் 3ம் பாகத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் முடிந்த நிலையில், படப்பிடிப்பும் பூஜை விழாவுடன் துவங்கியுள்ளது. இந்த பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.
News July 8, 2025
’₹8,000 கோடிக்கு வெளிநாட்டு பயணம்: காங்., விமர்சனம்’

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவிக்கு பாக்., நியமிக்கப்பட்டதில் இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காங்., சேர்ந்த ரன்தீப்சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். பாக்., இந்த வாய்ப்பு கிடைக்காமல் தடுப்பதில் PM மோடி தோல்வியடைந்து விட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் ₹8,000 கோடிக்கு சுற்றுப்பயணம் செய்து, எந்த நாட்டின் ஆதரவை பெற்றார் எனவும் கேள்வி எழுப்பினார்.