News August 21, 2024
தமிழகத்தில் நிம்மதியாக தொழில் செய்ய முடியும்

இன்று தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.51,157 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “கடந்த 3 ஆண்டுகளில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். இதன் மூலம் 6.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் நிம்மதியாக தொழில் நடத்தலாம் என்கிற நம்பிக்கைதான் இந்த வெற்றிக்கு காரணம்” என பெருமிதத்துடன் கூறினார்.
Similar News
News April 6, 2026
நகைக் கடன் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள்

நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை RBI வகுத்துள்ளது. இனி நகையின் மதிப்பில் 75% வரை மட்டுமே கடன் வழங்கப்படும். இதற்குமுன் 85% வரை கடன் வழங்கப்பட்ட நிலையில், தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சியை சந்திக்கும்போது ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நகைக் கடன் பெறுபவர்கள் அடையாளச் சான்று ஆவணங்களை சமர்ப்பிப்பது இனி கட்டாயம்.
News April 6, 2026
KKR Vs PBKS ஆட்டம் மழையால் பாதிப்பு

KKR, PBKS அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையின் குறுக்கீடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 3.4 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில், 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களை KKR எடுத்துள்ளது. ஃபின் ஆலன், கேமரூன் கிரீன் ஆகியோரின் விக்கெட்களை சேவியர் பார்ட்லெட் வீழ்த்தினார். 8 மணிக்கு 90% மழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியிருந்தது. எனவே, போட்டி தொடங்குமா என உறுதியாக தெரியவில்லை.
News April 6, 2026
சர்ச்சைகளுக்கு அஸ்வத்தாமன் முற்றுப்புள்ளி

சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், பண்ருட்டி தொகுதியில் சுயேச்சையாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் அஸ்வத்தாமனும் பங்கேற்றார். பின்னர் பேட்டியளித்த அவர், தேர்தலில் மோகனின் வெற்றிக்கு பாடுபடுவேன் எனக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். <<-se>>#TNElection2026<<>>


