News April 8, 2025
எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: TN அரசு

‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தின்கீழ் எந்த ரேஷன் கடையிலும் மக்கள் பொருள்களை வாங்கலாம் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில், TN-ல் முதல்கட்டமாக 3,139 ரேஷன் கடைகளும், 2-ம் கட்டமாக 5,000 கடைகளும் நவீனமயம் ஆக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 3-ம் கட்டமாக 10,000 கடைகள் நவீனமயமாக்கப்பட இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News April 17, 2025
5 ஆண்டுகளுக்கு பிறகு.. DC-யின் மாஸ் ரெக்கார்ட்!

18 வருட IPL வரலாற்றில் சூப்பர் ஓவரில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை DC அணி படைத்துள்ளது. இதுவரை 5 சூப்பர் ஓவர்களில் விளையாடி, அவற்றில் 4-ல் DC(முன்னர் Delhi Daredevils) வெற்றி பெற்றுள்ளது. இந்த பட்டியலில் PBKS அணி, 3 வெற்றிகளை பெற்று 2-வது இடத்தில் உள்ளது. நேற்றைய மேட்ச் யாரு பாத்தீங்க?
News April 17, 2025
அட்சய திருதியில் ஏன் தங்கம் வாங்க வேண்டும்?

சித்திரை மாத அமாவாசைக்கு அடுத்த வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் இந்த நாளில், தானங்கள் செய்து புண்ணியத்தைப் பெறுவது மிகவும் சிறப்பு. இந்த நாளில் செய்யப்படும் புதிய தொடக்கங்கள், முதலீடுகள் அனைத்தும் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும் என்பது நம்பிக்கை. வரும் ஏப்ரல் 30-ம் தேதி இந்த திருதியை வருகிறது.
News April 17, 2025
சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் – வலுக்கும் கண்டனம்

நாங்குநேரியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சாதிய தாக்குதலுக்குள்ளான மாணவர் சின்னத்துரை மீண்டும் தாக்கப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இன்ஸ்டா மூலம் பழகிய நபர்கள், சின்னத்துரையை தனியாக அழைத்து தாக்கியதாகவும் முந்தைய தாக்குதலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சின்னத்துரையை தாக்கியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என கண்டன குரல்கள் வலுத்துள்ளன.