News December 28, 2024

இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்..

image

தமிழ் திரையுலகம் ஆயிரக்கணக்கான நடிகர்களை தந்திருந்தாலும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் காலத்திற்கும் குடி கொண்ட கலைஞர்கள் வெகு சிலரே. அப்படி நம் அனைவரின் உள்ளத்தையும் குடிகொண்டு கேப்டன் என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் நம்மை விட்டு பிரிந்து இன்றுடன் ஒராண்டு ஆகிவிட்டது. பசி என வருபவர்களுக்கு உணவை அள்ளி வழக்கியவர். உங்களுக்கு கேப்டனிடம் பிடித்த விஷயம் என்ன?

Similar News

News March 26, 2026

இனி இவர்களுக்கு ரயில் பயணம் ஃப்ரீ..

image

சேனா, நௌசேனா, வாயுசேனா விருதுகளை பெற்ற ராணுவ வீரர்கள் வாழ்நாள் முழுவதும் ரயில்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்த வீரர்களின் துணைவர் (மறுமணம் வரை) அல்லது திருமணம் ஆகாத நிலையில் உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. First Class, 2AC, AC Chair Car வகுப்புகளில் தேவையானதை தேர்வு செய்து அவர்கள் இலவசமாக பயணிக்கலாம்.

News March 26, 2026

BREAKING: தவெகவில் இணைந்தார் டி.செல்வம்

image

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி காங்., மாநில பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட <<19471779>>டி.செல்வம்<<>>, தற்போது தவெகவில் இணைந்துள்ளார். பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்துள்ளார். டி.செல்வத்திற்கு தவெக துண்டை அணிவித்து விஜய் வரவேற்றார். அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் தவெகவில் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

News March 26, 2026

திமுக மண்ணைக் கவ்வுவது உறுதி: விஜய்

image

மகளிர் பற்றி ஆபாசமாக பேசுவோர் மீது திமுக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது X பதிவில், என் அம்மா, அக்கா, தங்கைகளை திமுகவின் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி பேசியிருப்பதாக விஜய் கூறியுள்ளார். தவெகவை சீண்டுவதாக நினைத்து ஒட்டுமொத்த மகளிரை அவமதிக்கும் காரணத்தால், தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி திமுக மண்ணைக் கவ்வுவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!