News November 23, 2024
உபியில் ஓங்கும் யோகியின் கை

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற 9 சட்டமன்ற இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் சமாஜ்வாதி முன்னிலை பெற்றிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் கை ஓங்கியிருந்ததால், இந்த முறையும் அவர்கள் அதிக தொகுதிகளை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜகவின் கையே ஓங்கியிருக்கிறது.
Similar News
News January 11, 2026
அடுத்த மெகா விற்பனையை அறிவித்த நிறுவனங்கள்

அமேசானும், பிளிப்கார்ட்டும் அடுத்த பெரிய விற்பனைக்கு தயாராகி வருகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 16-ம் தேதி ‘Great Republic Day Sale’-ஐ தொடங்க உள்ளதாக அமேசான் அறிவித்துள்ளது. SBI கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிளிப்கார்ட்டின் குடியரசு தின விற்பனை வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. டிவி, போன்கள், லேப்டாப்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
News January 11, 2026
அடுத்த 45 நாள்களுக்கு நாடு தழுவிய பிரசாரம்

100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி, நாடு தழுவிய 45 நாள் பிரசாரத்தை காங்., முன்னெடுத்துள்ளது. இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டமும், நாளை முதல் வரும் 29-ம் தேதி வரை கிராம பஞ்சாயத்துகளில் மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், பிப். 7 -15 வரை மாநில அளவிலும், பிப்.16 – 25 வரை பெரிய பேரணிகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
News January 11, 2026
பெரியார் பொன்மொழிகள்

*முன்நோக்கிச் செல்லும் போது பணிவாக இரு. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள். *ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். *ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள். *துறவிகள் மோட்சத்திற்கு போக வேண்டும் என்று பாடுபடுகின்றார்களே தவிர, சமூகத்தில் மனித மேம்பாட்டுக்காக பாடுபடுவதில்லை.


