News April 11, 2025
பங்குனி உத்திரத்தில் யோகி பாபு பக்தி பரவசம்!

பங்குனி உத்திர நாளை முன்னிட்டு நடிகர் யோகிபாபு தனது X பக்கத்தில் முருகன் படத்தை பதிவிட்டுள்ளார். திரைப்படங்களில் காமெடி நடிகராக கலக்கி வரும் யோகி பாபு, நிஜ வாழ்க்கையில் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி முருகன் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். இன்று பங்குனி உத்திரம் என்பதால், ஓம் சரவணபவ என முருகன் படத்துடன் தனது X பக்கத்தில் பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
Similar News
News April 18, 2025
செல்பாேன் கட்டணம் மீண்டும் உயருகிறது.. எவ்வளவு?

செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில், அந்த நிறுவனங்கள் வரும் நவ.-டிச. மாதங்களில் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு கட்டணத்தை 10%-20% உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி விரிவாக்க செலவீனத்தை ஈடுகட்டவும், லாபத்தை அதிகரிக்கும் நோக்கிலும் இக்கட்டண உயர்வுக்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
News April 18, 2025
இனி GST நம்பர் உடனடியாக கிடைக்கும்

GST-க்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 7 நாள்களுக்குள் நம்பரை வழங்க வேண்டும் என்று CBIC உத்தரவிட்டுள்ளது. GST-க்கு விண்ணப்பம் செய்பவர்களிடம் அதிகாரிகள் தேவையற்ற ஆவணங்களை கேட்டு அலைக்கழிப்பதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, 7 நாள்களுக்குள் ரெஜிஸ்டிரேஷனை முடிக்க வேண்டும் என்று உத்தரவு பறந்துள்ளது. சந்தேகத்திற்குரிய விண்ணப்பங்களுக்கு மட்டும் 30 நாள்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
News April 18, 2025
வித்தியாசமான பெயரை குழந்தைக்கு வைத்த ராகுல்

கடந்த 24-ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு பெண் குழந்தை பிறந்தது. தனது பிறந்தநாளான இன்று குழந்தைக்கு ‘எவராஹ்’ என ராகுல் பெயர் சூட்டியுள்ளார். மனைவி குழந்தையுடன் தான் இருக்கும் போட்டோவுடன் பெயரை இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளார். ‘எவராஹ்’ என்ற பெயருக்கு ‘கடவுளின் பரிசு’ என அர்த்தம் என்பதையும் ராகுல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பெயர் நல்ல இருக்கா?