News March 26, 2025

யோகி ஆதித்யநாத் விமானத்தில் திடீர் கோளாறு

image

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இன்று மாலை ஆக்ராவில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார். ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடுவானில் அவரது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் ஆக்ரா ஏர்போர்ட்டில் அவரது விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர், மற்றொரு விமானத்தில் அவர் லக்னோ புறப்பட்டு சென்றார்.

Similar News

News March 30, 2025

ராசி பலன்கள் (30.03.2025)

image

➤மேஷம் – செலவு ➤ரிஷபம் – பயம் ➤மிதுனம் – கவலை ➤கடகம் – ஆதரவு ➤சிம்மம் – பணிவு ➤கன்னி – வெற்றி ➤துலாம் – நன்மை ➤விருச்சிகம் – அமைதி ➤தனுசு – தாமதம் ➤மகரம் – நற்செயல் ➤கும்பம் – மேன்மை ➤மீனம் – பாராட்டு

News March 30, 2025

சாய் பல்லவியின் எனர்ஜிக்கு காரணம் இதுதான்!

image

தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிப் படங்களில் நடித்துவரும் சாய் பல்லவி, தனது சிம்பிளான தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ரௌடி பேபி உள்ளிட்ட பாடல்களில் அதிக எனர்ஜியுடன் நடனமாடி அவர் அசத்தி இருப்பார். தினமும் தவறாமல் 2 லிட்டர் இளநீர் குடிப்பதே, அவரது எனர்ஜியின் ரகசியமாம். மேலும், தன்னுடைய டயட்டில் அதிகப்படியான காய்கறிகள் மற்றும் பழங்களை அவர் சேர்த்துக் கொள்கிறாராம்.

News March 30, 2025

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…!

image

8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் காட்டில் பணமழை தான். அவர்களின் ஊதியம், ஓய்வூதியம் சுமார் 2.89 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாம். குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000-ல் இருந்து ரூ.51,480 ஆக அதிகரிக்கும் எனவும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000-ல் இருந்து ரூ.25,740 ஆக உயரும் என்றும் கூறப்படுகிறது. 8வது ஊதியக் குழு 2026 ஏப்ரலில் அமைக்கப்படும் என தெரிகிறது.

error: Content is protected !!