News March 12, 2025
நேபாளத்தில் ட்ரெண்டாகும் யோகி ஆதித்யநாத்!

நேபாள் முன்னாள் அரசர் ஞானேந்திர ஷாவை வரவேற்க, முடியாட்சி ஆதரவு இயக்கம் (RPP), அந்நாட்டு தலைநகர் காத்மண்டுவில் பேரணி நடத்தியது. அதில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது பேசுபொருளாகியுள்ளது. 2025 ஜனவரியில் முன்னாள் அரசர் ஷா, உ.பி வந்த போது யோகியை சந்தித்தார். ஆனால், RPPக்கு கெட்ட பெயரை உண்டாக்க ஆளும் அரசால் செய்யப்பட்ட சதி இது என RPP குற்றஞ்சாட்டியுள்ளது.
Similar News
News March 12, 2025
விஜய்யை இழிவாக சித்தரித்து கார்ட்டூன்… குவியும் கண்டனம்…

தவெக தலைவர் விஜய்யை தினமலர் பத்திரிகை இழிவாக சித்திரித்திருப்பதாக அக்கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். விஜய்யை ஆடு போல சித்திரித்திருக்கும் தினமலர், ஆதவ் அர்ஜுனா இரட்டை இலையை புகட்டுவது போல கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி, தினமலர் வரம்பு மீறி செல்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
News March 12, 2025
மரடோனா மரண வழக்கு: விசாரணை தொடங்கியது

கால்பந்து விளையாட்டு ஜாம்பவனான அர்ஜென்டினாவின் மரடோனா (60) 2020இல் மாரடைப்பால் காலமானார். அதற்கு முன்பு ரத்த உறைதல் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டுக்கு திரும்பியிருந்தார். இதனால் மருத்துவ குழுவின் கவனக்குறைவே மரணத்திற்கு காரணமென குற்றஞ்சாட்டி 8 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. 8 பேர் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும்.
News March 12, 2025
₹87 லட்சம் கோடி காலி

கடும் சரிவை சந்தித்துவரும் இந்திய பங்குச்சந்தைகள், சுமார் $1 ட்ரில்லியன் சந்தை மதிப்பை இழந்திருப்பதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பில் ₹87 லட்சம் கோடி. கடந்த டிசம்பர் மாதம் உச்சம் தொட்ட நிஃப்டி, அதிலிருந்து 16% மதிப்பினை இழந்திருக்கிறது. சிறிய நிறுவனங்கள் பெரும் சரிவை கண்டிருக்கின்றன. இதனால், முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.