News October 3, 2025
வயிற்று சதையை குறைக்கும் யோகாசனம்!

உத்தானபாத ஆசனம் செய்வதால், அடிவயிற்றின் சதை, இடுப்புச் சதை ஆகியவை குறையும் ➤மல்லாந்து படுத்துக்கொண்டு இரு கைகளையும் உடலோடு ஒட்டி வைக்கவும் ➤கால் முட்டிகளை மடக்காமல் இரு கால்களும் ஒன்றாக வைத்து, மெதுவாக மேலே உயர்த்தவும் ➤இரு கைகளையும் விரிப்பில் தலைக்கு மேல் நீட்டி(படத்தில் உள்ள போது) வைக்கவும் ➤இந்த நிலையில் 20- 25 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE.
Similar News
News October 3, 2025
அமைதிக்கு உடன்படாத ஹமாஸ்: 57 பேர் பலி

டிரம்ப் வகுத்த அமைதி திட்டத்துக்கு இஸ்ரேல் PM ஒப்புக்கொண்டாலும், ஹமாஸ் செவிசாய்ப்பதாக இல்லை. இதனால் மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியதில், நேற்று 57 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு காசாவில் 27 பேரும், உணவு விநியோக மையங்களில் 30 பேரும் கொல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். காசாவிற்கு உதவி பொருள்கள் ஏற்றிவந்த கப்பல்களையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது.
News October 3, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ₹880 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹880 குறைந்து ₹86,720-க்கும், கிராமுக்கு ₹110 குறைந்து ₹10,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலை மீண்டும் குறையத் தொடங்கியதால், நகை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
News October 3, 2025
இன்னொரு வீடியோவை வெளியிடவுள்ளாரா விஜய்?

கரூர் சம்பவத்துக்கு 3 நாட்கள் கழித்து விஜய் வெளியிட்ட வீடியோ அவருக்கே BackFire ஆகியிருக்கிறது. இதனால், வீடியோவில் சொன்னது தெளிவு இல்லாதது போல இருந்ததாகவும், மக்களுக்கு புரியும்படி இன்னொரு வீடியோவோ, அறிக்கையோ விட்டால் சரியாக இருக்கும் என தந்தை SAC-ஏ விஜய்யிடம் சொன்னதாக தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர். தந்தையின் இந்த அட்வைஸை விஜய் ஏற்பாரா?