News September 8, 2025
தொப்பை குறைய உதவும் யோகாசனம்!

✦வயிறு தசைகளை உறுதியாக்கி, தொப்பை குறைய வசிஸ்தாசனம் உதவும்.
➥தரையில் உள்ளங்கைகளை ஊன்றி, கைகளை நேராக வைத்து, உடலை உயர்த்தி, கால் விரல்களை ஊன்றி, உடலை நேர்கோட்டில் கொண்டுவரவும்.
➥பின் உடலை வலது புறம் திருப்பி, வலது கையால் ஊன்றி, இடது கையை மேலே தூக்கவும். கால்களை ஒன்றின் மீது ஒன்று வைக்கவும்.
➥தலையை மேலே தூக்கிய கையை நோக்கி பார்த்து, 20 விநாடிகள் தங்கி பிறகு பக்கத்தை மாற்றவும். SHARE IT.
Similar News
News September 8, 2025
24K, 22K, 18K தங்கம்.. என்ன வித்தியாசம் தெரியுமா?

தினசரி நாம் கேள்விப்படும் தங்க நகைகளில் 24K-வில் தொடங்கி, 22K, 18K, 14K, 10K என்ற வெரைட்டிகள் உள்ளன. இவை தங்கத்தின் தூய்மையை குறிக்கிறது. 24K என்பது 99.9% தூய்மையானது, அதே போல 22K என்பது 91.3% தூய்மையானதாகவும் 8.7% செம்பு, வெள்ளி போன்றவை கலக்கப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பயன்பாடும் உள்ளது. அவற்றை பற்றி அறிய, மேலே உள்ள படங்களை Swipe செய்து பார்க்கவும். Share it to friends.
News September 8, 2025
ரொம்ப விரக்தியை ஏற்படுத்தும்: ஷ்ரேயஸ்!

IPL தொடரில் 604 ரன்களை குவித்த போதும், Asia Cup தொடரில் ஷ்ரேயஸ் ஐயருக்கு இடம் கிடைக்காதது கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது. ரிசர்வ் வீரர்களின் பட்டியலில் கூட இடம் கிடைக்காதது குறித்து, முதல் முறையாக ஷ்ரேயஸ் பேசியுள்ளார். Podcast ஒன்றில் பேசும் போது, பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கு தகுதியாக இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் போவது விரக்தியை மட்டுமே ஏற்படுத்தும் என ஷ்ரேயஸ் கூறியுள்ளார்.
News September 8, 2025
FLASH: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் குல்காம் வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசாரும், CRPF வீரர்களும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்ட நிலையில், 3 CRPF வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.