News August 7, 2025

BREAKING: 2-வது வழக்கிலும் திமுக வெற்றி

image

அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல 4 IAS அதிகாரிகள் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. இந்த மனுவை தாக்கல் செய்த BJP ஆதரவாளரான சத்யகுமாருக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று, அரசின் திட்டங்களுக்கு முதல்வரின் பெயர் சூட்டப்படுவதற்கு எதிராக CV சண்முகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த SC, ₹10 லட்சம் அபராதம் விதித்திருந்தது.

Similar News

News March 7, 2026

தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $82.45 (இந்திய மதிப்பில் ₹7,580) உயர்ந்து $5,171.92-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1.5 உயர்ந்து $84.54-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கம், இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 7, 2026

தேர்தல் செலவு விவகாரத்தில் அதிமுக மா.செ.,க்கள் அப்செட்?

image

தேர்தல் நெருங்கும் நிலையில், செலவு குறித்து EPS மெளனம் காப்பதால் மா.செ.,க்கள் அப்செட் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4-ம் தேதி கட்சி ஆபிஸை தொடர்ந்து தனது வீட்டிலும் மா.செ.,-க்கள் கூட்டத்தை EPS நடத்தினார். அப்போது, பூத் கமிட்டி, வேட்பாளர் தேர்வு பற்றி மட்டுமே EPS பேசினாராம். தேர்தல் செலவு குறித்து இதுவரை பேசாமல் இருப்பதால், வேட்பாளர் தேர்விலும் சுணக்கம் நிலவுவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

News March 7, 2026

நெஞ்சு சளி விரட்டும் கசாயம்!

image

➤தேவை: கற்பூரவல்லி, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், மிளகு சீரகம், துளசி, இஞ்சி, மஞ்சள் தூள் ➤செய்முறை: மேலே குறிப்பிட்ட அனைத்தையும் (மஞ்சளை தவிர்த்து) நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு, மஞ்சள் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். இதனை இரவில் குடித்து வர நெஞ்சு சளி நீங்கும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அனைவருக்கும் இதை பகிருங்கள்.

error: Content is protected !!