News April 8, 2025
நேற்று கருப்பு பேட்ஜ்.. இன்று கருப்புச் சட்டை!

சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்தபடி அதிமுகவினர் இன்று வந்தனர். டாஸ்மாக்கில் நடந்த ஊழலை கண்டித்தும், யார் அந்த தியாகி என கேள்வி எழுப்பியும் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து அதிமுகவினர் பேரவைக்கு சென்றிருந்தனர். அப்போது பதாகைகளை ஏந்தி பேரவைக்குள் அமளியில் ஈடுபட்டதால், இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 2வது நாளாக இன்று கருப்புச் சட்டை அணிந்தபடி பேரவைக்கு வருகை புரிந்துள்ளனர்.
Similar News
News April 17, 2025
நான் ரஜினியின் சிஷ்யன் : நெகிழும் உபேந்திரா

கூலி படத்தில் நடிக்க லோகேஷ் என்னிடம் வந்து கதையை கூறினார். நான் எதுவும் கேட்கவில்லை. ரஜினி சார் பக்கத்தில் நின்றாலே போதும் என்றேன் என நடிகர் உபேந்திரா தெரிவித்துள்ளார். மேலும், நான் ஏகலைவன், ரஜினி சார் எனக்கு துரோணாச்சாரியார் போன்றவர். அவரை அந்த அளவுக்கு ஃபோலோ பண்றேன். அவருடைய படத்தில நடிக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
News April 17, 2025
அதிமுக கூட்டணியில் தொடருமா புதிய தமிழகம்?

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற <<16120626>>கிருஷ்ணசாமி<<>>, பங்கு தருபவர்களிடம் மட்டுமே புதிய தமிழகம் கூட்டணி வைக்கும் என்று தெரிவித்துள்ளார். பட்டியல் வெளியேற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் செய்து அவர் மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக முக்கிய தலைவர்கள், அவரிடம் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியதாக கூறப்படுகிறது.
News April 17, 2025
சஞ்சு சாம்சனுக்கு ஓய்வு?

DC அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்யும்போது RR கேப்டன் சஞ்சு சாம்சன், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட வலியால் பாதியிலேயே வெளியேறினார். இதனால், அவர் அடுத்த போட்டியில் பங்கேற்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில் கேப்டன் பொறுப்பு ரியான் பராக்கிடம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது RR அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.