News August 5, 2024
நேற்று தலாய் லாமா; இன்று ஷேக் ஹசீனா?

ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து தப்பி திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு வந்துள்ளார். இந்தியாவில் அவர் தஞ்சமடைவார் என்று கூறப்படும் நிலையில், இதற்கு முன் புத்தமதத் தலைவர் தலாய் லாமாவுக்கு இந்தியா 60 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்து வருகிறது. 1962இல் இந்தியா வந்த அவரை, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சீனா, இந்தியாவுக்கு கடும் அழுத்தம் கொடுத்த நிலையில், அதற்கு பணிய முன்னாள் பிரதமர் நேரு மறுத்துவிட்டார்.
Similar News
News April 2, 2026
வில்லன் நடிகர் காலமானார்.. குடும்பத்தினர் வேதனை

பழம்பெரும் ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ <<19443820>>சக் நோரிஸ்<<>> அண்மையில் காலமானார். ஆனால், சித்தரிக்கப்பட்ட அவரது வீடியோக்கள் (AI Generated) சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருவதாக குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். இறந்த பிறகும் சக் நோரிஸின் உடல்நிலை தொடர்பாக பரவிவரும் தகவல்களில் உண்மையில்லை எனவும், அதுகுறித்த தகவல்களை யாரும் பகிர வேண்டாம் எனவும் குடும்பத்தினர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
News April 2, 2026
EPS கேட்டால் டெல்லியில் இருந்து நிதி வரும்: ராஜேந்திர பாலாஜி

தமிழ்நாட்டில் மோசமாக உள்ள நிதிநிலைமையை அதிமுக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே சரி செய்ய முடியும் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மோடி தங்கள் பக்கம் உள்ளதால் EPS கேட்டால் கோடிக்கணக்கான பணம் வரும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால், திமுகவோ எப்போதும் டெல்லியுடன் சண்டையிடுவது, மோடியை மதிக்காதது, மத்திய அரசை ஒன்றிய அரசு என சொல்வதை மட்டுமே செய்ததாகவும் அவர் சாடியுள்ளார்.
News April 2, 2026
ஹார்முஸ் எங்கள் பொறுப்பல்ல: டிரம்ப்

<<19543463>>ஈரான் போரில்<<>> US-க்கு உதவிய சவுதி, கத்தார், UAE உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு வெள்ளை மாளிகையில் டிரம்ப் நன்றி தெரிவித்தார். ஹார்முஸ் நீரிணை வழியாக தாங்கள் இதுவரை எண்ணெய் இறக்குமதி செய்யவில்லை என்றும் இனியும் செய்யப்போவதில்லை எனவும் கூறினார். அதேநேரம், ஹார்முஸை பாதுகாப்பதற்கு அந்தப் பாதையை சார்ந்திருக்கும் நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.


