News August 10, 2025

நேற்று அன்புமணி.. இன்று ராமதாஸ்..

image

பூம்புகாரில் இன்று மாலை 3 மணிக்கு ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மாநில மகளிர் மாநாடு நடைபெறவுள்ளது. நேற்று இரவே மாநாட்டு திடலுக்கு சென்ற ராமதாஸ் ஏற்பாடுகளை பார்வையிட்டார். இந்த மாநாட்டில் வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 10, 2025

ஆக.15 முதல் ₹3,000 பாஸ் அமல்.. ரெடியா இருங்க!

image

ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி நாடு முழுதும் பயணிக்கும் புதிய, ‘FASTAG’ நடைமுறை வரும் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த பாஸ், ஆக்டிவேட் செய்யப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு (அ) 200 முறை பயணிக்கலாம். வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்களுக்கான இத்திட்டத்தில் கார்கள், ஜீப்கள், வேன்கள் போன்ற வாகனங்கள் இந்த பாஸை பயன்படுத்தலாம். வாகன ஓட்டிகள் இந்த வருடாந்திர பாஸை ‘<>ராஜ்மார்க் யாத்ரா<<>>’வில் பெறலாம். SHARE IT.

News August 10, 2025

பேச்சுவார்த்தை தோல்வி, திமுக அரசுக்கு தொடரும் நெருக்கடி

image

தலைநகரில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதனையடுத்து, திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது. பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இது திமுக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தலைநகரிலேயே இருக்கும் CM ஸ்டாலின், போராட்டக்காரர்களை ஏன் சந்திக்கவில்லை என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

News August 10, 2025

சஞ்சு RRஐ விட்டு வெளியேற வைபவ் காரணமா?

image

RR அணியை விட்டு சாம்சன் வெளியேற இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான் காரணம் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது. 2025 தொடரில் ஓப்பனராக களமிறங்கி வைபவ் அசத்தியதால், வரும் ஆண்டுகளில் அவரை ஓப்பனராக களமிறக்க RR முடிவு செய்துள்ளதாம். மற்றொரு இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஓப்பனராக இருக்கும் நிலையில், இது சஞ்சுவுக்கு நெருக்கடி உருவாக்கியதன் காரணமாகவே அவர் அணியை விட்டு விலகுவதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!