News March 12, 2025
அன்று கால்பந்து வீரர்… இன்று ஜிலேபிக் கடைக்காரர்…

வறுமை பலரின் கனவுகளுக்கு தடைக்கல்லாய் அமைகிறது. அதற்கு சிறந்த உதாரணம், பாகிஸ்தான் கால்பந்து வீரர் முகமது ரியாஸ். 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அணிக்காக விளையாடிய அவர், தற்போது வாழ்வாதாரத்திற்காக ஜிலேபி விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். பாக்-ல் கால்பந்திற்கு தடை விதிக்கப்பட்டதே அதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News July 10, 2025
மோடிக்கு நாட்டின் உயரிய விருதை வழங்கிய நமீபியா

நமீபியா குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘வெல்விட்சியா மிரபலீஸ்’ விருது PM மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. உலக அமைதி, சமூக பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக மோடிக்கு இவ்விருதை நமீபியா வழங்கியுள்ளது. உயரிய விருது தனக்கு வழங்கப்பட்டதை பெருமையாக கருதுவதாக மோடி தெரிவித்தார். சர்வதேச நாடுகளிடம் இருந்து அவருக்கு கிடைக்கும் 27-வது விருது என்பது குறிப்பிடத்தக்கது.
News July 10, 2025
மரண தண்டனையில் இருந்து தப்ப என்ன வழி?

கொலைக் குற்றச்சாட்டில் ஏமன் சிறையில் உள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு வரும் <<16997656>>16-ம் தேதி மரண தண்டனை<<>> நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில், கொலையானவரின் குடும்பத்தினர் மன்னிப்பு அளித்தால் மட்டுமே இவர் உயிர் பிழைக்கலாம். இதற்காக கொலையானவரின் சகோதரருக்கு இழப்பீடாக 1 மில்லியன் டாலர் பணம், சவுதி (அ) UAE-யில் நிரந்தர வசிப்பிடம் வழங்க மனித உரிமை அமைப்புகள் இந்திய அரசு உதவியுடன் முயற்சித்து வருகின்றன.
News July 10, 2025
டிரம்ப் வரி விதிப்பு பட்டியல்.. இந்தியாவின் பெயர் இல்லை

கூடுதல் வரி விதிக்கப் போவதாக கூறி டிரம்ப் வெளியிட்டுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை. அதில், 20 நாடுகளின் பெயர்கள் உள்ளன. அதாவது, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம், இந்தோனேசியா, தெ.ஆப்பிரிக்கா, போஸ்னியா, கம்போடியா, கஜகஸ்தான், லாவோஸ், ஹெர்சிகோவினா, செர்பியா, துனிசியா உள்ளிட்ட நாடுகளின் பெயர்கள் உள்ளன. இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தக உடன்பாடு செய்யவுள்ளது.