News June 26, 2024
ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த யெஸ் வங்கி!

நிர்வாக சீரமைப்பு, செலவினக் குறைப்பு ஆகிய காரணங்களுக்காக யெஸ் வங்கி தனது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. முறையற்ற வகையில் கடன் வழங்கியதால், திவால் நிலைக்கு சென்ற யெஸ் வங்கிக்கு எஸ்பிஐ வங்கி உதவிக்கரம் நீட்டி மீட்டெடுத்தது. இந்நிலையில், நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ள யெஸ் வங்கி, முதற்கட்டமாக 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.
Similar News
News November 18, 2025
நாளை தமிழகம் வருகிறார் PM மோடி

வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை(நவ.19) PM மோடி தமிழகம் வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் 5000 விவசாயிகள் பங்கேற்கின்றனர். மண் வளம், மனித வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

BREAKING: பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் இன்று (நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மேலும் சில மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.