News October 22, 2025
மஞ்சள், ஆரஞ்சு, ரெட் அலர்ட்; எதை குறிக்குது?

➤பச்சை: வானிலை பாதுகாப்பாக உள்ளது. அன்றாட நடவடிக்கைகளை தொடரலாம் ➤மஞ்சள்: வானிலை மோசமடைய வாய்ப்பு. மழையால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் ➤ஆரஞ்சு: போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொடர்பு போன்ற பொதுசேவைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு ➤ரெட்: மிகவும் அபாயகரமான வானிலை. உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தல். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதை குறிக்கிறது. SHARE IT.
Similar News
News January 14, 2026
உலகமெங்கும் கால்பதிக்க தயாராகும் UPI!

இந்தியாவின் உள்நாட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை தளமான UPI-ஐ, பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி சேவைகள் செயலாளர் நாகராஜு தெரிவித்துள்ளார். இதன்மூலம் வெளிநாடு செல்லும் இந்தியர்கள் சிரமமின்றி டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். பூடான், சிங்கப்பூர், கத்தார், பிரான்ஸ் உள்ளிட்ட 8 நாடுகளில் தற்போது UPI வசதி செயல்பாட்டில் உள்ளது.
News January 14, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 580 ▶குறள்: பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். ▶பொருள்: கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.
News January 14, 2026
சிப்ஸ் பாக்கெட் பொம்மை வெடித்து பார்வை இழப்பு!

சிப்ஸ் பாக்கெட்டில் வரும் பொம்மை வெடித்து குழந்தையின் கண்பார்வை பறிபோன துயர சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. 8 வயதான அன்கேஷ், சிப்ஸ் பாக்கெட்டில் வந்த பொம்மையை வைத்து சமையல் அறையில் விளையாடியுள்ளான். அப்போது, அந்த பொம்மை ஸ்டவ்வில் விழுந்து வெடித்ததால் கண்பார்வை பறிபோயுள்ளது. கடந்த மாதம் இதே மாநிலத்தில் சிப்ஸ் பாக்கெட் பொம்மையை விழுங்கி 4 வயது குழந்தை பலியானது. பெற்றோர்களே கவனம்.


