News December 20, 2024
7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதனால், அடுத்த சில தினங்களுக்கு, கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை தி.மலை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
Similar News
News March 5, 2026
‘VIROSH’ ரிசப்ஷனில் குவிந்த பிரபலங்கள் (PHOTOS)

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனாவின் ரிசப்ஷன் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. நடிகர்கள் கார்த்தி, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, ராணா, ஞானி மற்றும் நடிகைகள் ஸ்ரீலீலா, மிருணாள் தாக்கூர், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். விழாவில் கர்நாடக DCM டிகே சிவக்குமார், கிஷன் ரெட்டி MP, பிஆர்எஸ் தலைவர் KTR உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
News March 5, 2026
பாரதியார் பொன்மொழிகள்

*ஏதும் அறியாமலிருப்பது அறியாமை இல்லை. கண்டதெற்கெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு, காலத்தையும், வாழ்வையும் வீணாக்குவது தான் அறியாமை *எவனையும் வெற்றுக் காகிதம் என ஒருபோதும் எண்ணாதே. ஒருநாள் அவன் பட்டமாய் பறப்பான். நீயும் அவனை அண்ணாந்துதான் பார்க்க வேண்டும் *இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்து கொள்ளவேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை *கல்வியும் தவமும் எந்த பிராயத்திலும் தொடங்கலாம்.
News March 5, 2026
கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

போரில் கொல்லப்பட்ட கமேனியின் இறுதிச்சடங்கு நேற்று மாலை மஷாத் நகரில் உள்ள ரேசா புனித தளத்தில் நடைபெறும் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், டெஹ்ரான் உள்ளிட்ட ஈரானின் முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல், வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிச்சடங்கின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஈரான் அரசு கூறியுள்ளது.


