News October 1, 2025

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓபனிங் ஆடலாம்: அஸ்வின்

image

2026 T20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, 15 T20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. எனவே, இந்த T20 போட்டிகளில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஓபனிங் பேட்டராக களமிறக்க வேண்டும் என்று அஸ்வின் வலியுறுத்தியுள்ளார். அவரும், அபிஷேக் சர்மாவும் விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் சுப்மன் கில்லின் ஆட்டம் விமர்சனத்திற்குள்ளான நிலையில், அஸ்வின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Similar News

News October 1, 2025

வாரிசுக்கு ‘நோ’ சொன்னதா திமுக தலைமை?

image

வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு பதிலாக தனது 3வது மகன் மகேஷை எப்படியாவது திருச்செந்தூரில் நிறுத்திவிடலாம் என்ற யோசனையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இருந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் கூட தலைமையின் காதுகளுக்கு விஷயத்தை அமைச்சர் தரப்பு பாஸ் செய்ததாம். ஆனால் தலைமையோ, அது சரிவராது எனவும், தேர்தல் வேலைகளை கவனியுங்கள் என்றும் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.

News October 1, 2025

நாளை சிக்கன், மட்டன், மீன் சாப்பிட முடியாது

image

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாளை இறைச்சி கடைகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அகிம்சையை கடைப்பிடிக்கும் வகையில், கோழி, மீன், ஆடு உள்ளிட்ட அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் விற்பனைக்கு வைத்துள்ள இறைச்சி உள்ளிட்ட மாமிசங்கள் மற்றும் கருவிகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News October 1, 2025

உங்க UPI -ல் உடனே இதனை பண்ணுங்க!

image

மோசடிகளை தவிர்க்க UPI IDல், மொபைல் எண்ணை மறைக்க வேண்டும் ✱UPI App-ல் ‘Profile’-ஐ கிளிக் பண்ணுங்க ✱அதில், Payment settings-ஐ தேர்ந்தெடுத்தால், UPI கணக்குகளும், ID விவரங்களும் காட்டப்படும் ✱ID பக்கத்தில் இருக்கும் ‘View’ என்பதை கிளிக் செய்து, புதிய UPI ID-யை உருவாக்கவும் ✱இந்த வசதியை Paytm மட்டுமே வழங்கி வரும் நிலையில், அனைத்து UPI-யிலும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT.

error: Content is protected !!