News March 13, 2025
ஹைப்ரிட் பைக்கை அறிமுகம் செய்தது யமஹா

இந்தியாவின் முதல் 150CC ஹைப்ரிட் பைக்கை யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதிலிருக்கும் SMG மோட்டர், இஞ்சினுடன் இணைந்து செயல்பட்டு மைலேஜை அதிகப்படுத்தும். மேலும், சிக்னல்களில் தானாக இஞ்சினை ஆஃப் செய்யும் சிஸ்டம் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன. Yamaha FZ-S Fi Hybrid என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பைக், ₹1,44,800க்கு அறிமுகம் ஆகியிருக்கிறது.
Similar News
News March 9, 2026
அமெரிக்கா இங்கு மட்டும் தாக்குதல் நடத்தாது

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல்களை நடத்தினாலும், அந்நாட்டில் உள்ள கார்க் தீவை தொடவில்லை. ஈரானின் கடற்கரையிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள இந்த தீவு, மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி முனையமாக உள்ளது. ஒரே நாளில் 7 மில்லியன் பீப்பாய்கள் ஏற்றும் திறன் கொண்டது. கார்க் தீவை தாக்கினால், வளைகுடா நாடுகளின் எண்ணெய் கட்டமைப்பு மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்பதால் USA தாக்கவில்லை என்று கூறப்படுகிறது.
News March 9, 2026
சற்றுமுன்: முன்னாள் அமைச்சர் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான கவுரி சாம்ப சிவராவ்(82) காலமானார். உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. 5 முறை லோக் சபா MP ஆக பணியாற்றிய அவர், 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஜவுளித் துறை அமைச்சராக பதவி வகித்தார். கவுரி சாம்ப சிவராவ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News March 9, 2026
சற்றுமுன்: விஜய் கொந்தளித்தார்

தமிழகத்தில் நடந்த 5 குற்ற சம்பவங்களை சுட்டிக் காட்டி TN அரசுக்கு விஜய் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை ஆகாஷ் மரணம், நாமக்கல் சிறுமி ரேப் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டுள்ள தவெக, இது தமிழகமா (அ) சுடுகாடா என்றும் திமுக அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதாகவும் சாடியுள்ளது. மேலும், ரத்த ஆறாக ஓடும் தமிழகம் இன்று கண்ணீரில் மிதக்கிறது எனத் தெரிவித்துள்ளது.


