News June 15, 2024
ஹாட் ஸ்டாரில் வெளியான யாக்ஷினி வெப் தொடர்

வேதிகா நடித்துள்ள யாக்ஷினி வெப் தொடர், ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘முனி’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்த வேதிகா, காளை, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சில ஆண்டுகள் நடிப்பதை தவிர்த்த அவர் தற்போது ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில், தற்போது அவர் நடித்துள்ள யாக்ஷினி வெப் தொடர், தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.
Similar News
News March 17, 2026
IPL 360: தோனி 5 or 6-ல் பேட்டிங் செய்யணும்.. ABD!

*IPL 2026-ல் CSK அணிக்காக தோனி, 5 அல்லது 6-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என AB டிவில்லியர்ஸ் வலியுறுத்தியுள்ளார் *இந்த ஆண்டு DC அணியில் ஓப்பனராக KL ராகுல் களமிறங்கவுள்ளார் *காயம் காரணமாக, RCB பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் முதல் இரு IPL போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது *KKR கேப்டனாக அஜிங்கியா ரஹானே தொடருவார் என அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
News March 17, 2026
FLASH: தங்கம் விலையில் தலைகீழ் மாற்றம்

உச்சத்தில் இருந்த தங்கம் விலை, ஈரான் – இஸ்ரேல் போர் தொடங்கிய பிறகு தலைகீழ் மாற்றத்தை சந்தித்து வருகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ₹3,200 குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, ₹35,000 வரை குறையும் என <<19401126>>ஜெயந்திலால் சலானியும்<<>> தெரிவித்துள்ளார். ஆனால், இந்த மாற்றம் உடனே நிகழ வாய்ப்பில்லையாம். படிப்படியாகவே தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
News March 17, 2026
ஒரு மூலையில் மட்டும் ஏன் SIM கார்டு வெட்டப்பட்டுள்ளது?

சிம் கார்டின் இந்த வடிவத்திற்கு பின்னால், ஒரு காரணம் உள்ளது. தொடக்கத்தில் சிம் கார்டுகள் செவ்வக வடிவிலேயே இருந்தன. அப்போது போனில் சிம் கார்டை எப்படி சொருகுவது என பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது. மாற்றி சொருகுவதால், சிம் கார்டு சேதமடைய வாய்ப்பு இருந்ததுள்ளது. இந்த குழப்பத்தை தீர்க்கவே, ஒரு மூலையில் மட்டும் வெட்டி, போனில் உள்ள சிம் கார்டு Slot-ஐயும் அதற்கேற்ப வடிவமைத்துள்ளனர். SHARE IT.


