News March 13, 2025
XXX சோப் நிறுவனர் காலமானார்

தென்னிந்தியாவில் பிரபலமான ‘XXX சோப்’ நிறுவனத்தின் தலைவரான மாணிக்கவேல் அருணாச்சலம் காலமானார். சமீபமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவர், ஆந்திராவில் உயிரிழந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர், ஆந்திராவில் குடியேறி சோப் தொழிலைத் தொடங்கினார். இத்தொழில் படிப்படியாக வளர்ந்து, தற்போது தென்னிந்தியாவின் நம்பர் 1 சோப் என்று சொல்லும் நிலையை எட்டியுள்ளது.
Similar News
News March 4, 2026
நாங்குநேரி சம்பவம்; பொதுமக்கள் ஏன் உதவவில்லை? – விளக்கம்

நாங்குநேரியில் சாலையில் செல்பவர்களை அரிவாளால் வெட்டி கொடூர தாண்டவம் ஆடிய கும்பல் பைக்குகளில் மஞ்சங்குளத்திற்கு சென்றனர். அங்கு ஒருவரின் பெயரை(அவரது சமூகத்துடன்) சத்தமாக கூறி வாழ்க கோசமிட்டனர். அப்போது பைக்கில் இருந்து ஒருவர் கீழே விழுந்தார். அவரை தூக்கி விட முயன்ற அப்பகுதி மக்களை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். இதனால் உதவிக்கு வந்தவர்களும் ஓட்டம் பிடித்தனர் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.
News March 4, 2026
உங்கள் உடல் உறுப்புகளை கொல்லும் உணவுகள்

நமது உடலில் உள்ள அனைத்தும் சீராக இயங்கினால் மட்டுமே காலத்துக்கும் நாம் ஆரோக்கியத்துடன் இருக்கமுடியும். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் இருக்கும் உணவு பழக்கங்களால் இது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறிப்போய் இருக்கிறது. நீங்கள் சாப்பிடும் சில பொருள்கள் உங்கள் உடல் உறுப்புகளை மெல்ல கொல்கிறதாம். அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை வலதுபக்கம் SWIPE பண்ணுங்கள். விழிப்புணர்வுக்காக SHARE THIS.
News March 4, 2026
திமுகவில் இருந்து விலகல் அதிமுகவில் இணைந்தார்

மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மதுரை மன்னன், எஸ்.ஆர்.கோபி உள்ளிட்டோர் சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அந்த வகையில், மு.க.அழகிரிக்கு வலது கை போல் செயல்பட்டவரும், அழகிரி பேரவை ஈரோடு மாவட்டத் தலைவருமான சுகுணா சத்தியன், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். விரைவில் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் இபிஎஸ்ஸை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.


