News September 18, 2024

27 நாடுகளில் பரவிய XEC கொரோனா திரிபு

image

கொரோனா தொற்றின் புதிய திரிபான XEC, 27 நாடுகளில் பரவியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 500 பேருக்கு இந்த தொற்று அறிகுறி இருப்பதாகவும், ஓமிக்ரான் போன்றே இதுவும் மற்றொரு திரிபு என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனா போன்றே காய்ச்சல், தொண்டை வலி, இருமல், வாசனை உணர்வு இழப்பு இருக்கும் என்றும், தடுப்பூசி எடுத்துக்கொண்டால் பாதிப்பை தவிர்க்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News

News August 7, 2025

ஒரே வீட்டில் 48 வாக்காளர்கள்: ராகுல்

image

மகாராஷ்டிராவில் கடந்த 4 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களை விட சட்டமன்ற தேர்தலுக்கு 5 மாதங்கள் முன்னதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் அதிகம் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லியில் பேட்டியளித்த அவர், பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகள் திருடப்படுவதாகவும், 1 BHK வீட்டில் 48 வாக்காளர்கள் இருப்பதாகவும் கூறினார். மேலும் வாக்காளர் பட்டியலை பகிர EC மறுப்பதாகவும் அவர் கூறினார்.

News August 7, 2025

உயிர் போகுமென தெரிந்தே அஜித்தை தாக்கிய கொடூரம்

image

கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களிடம் சிபிஐ நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உயிர் போகும் எனத் தெரிந்தே அஜித் குமாரை காவலர்கள் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். இந்த விவரங்களை சேர்த்து FIR திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20-க்குள் விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்யவுள்ளது. இதில், மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News August 7, 2025

அடுத்த 3 நாள்களுக்கு ‘HEAVY RAIN’ வார்னிங்!

image

இன்று முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. இன்று தி.மலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும், நாளை நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும், நாளை மறுநாள் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!