News October 3, 2024
WT20 WC: முதல் போட்டியில் வங்கதேசம் வெற்றி

மகளிர் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை 16 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த BAN அணி 20 ஓவர்கள் முடிவில் 119/7 ரன்கள் எடுத்தது. BAN அணியில் சோபனா மோஸ்டரி அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய SCO அணி 20 ஓவரில் 103/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
Similar News
News August 27, 2025
அஸ்வினின் புது முயற்சியை பார்க்க ஆவல்: பிரீத்தி

IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் அஸ்வின். மேலும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அஸ்வினின் மனைவி பிரீத்தி இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் மேற்கொள்ளும் புது முயற்சிகளையும், அதன் மூலம் அடையப் போகும் உயர்ந்த அளவிலான வெற்றிகளையும் காண ஆவலோடு இருப்பதாக கூறியுள்ளார்.
News August 27, 2025
விஜய் கூட்டணி வியூகம்.. திமுக அதிர்ச்சி

TVK யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் விஜய் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வாக்குத் திருட்டை கண்டித்து பிஹாரில் நடைபெறும் 16 நாள் பிரச்சாரப் பேரணியில் விஜய் பங்கேற்க முயல்வதாகவும், காங்., உடனான கூட்டணிக்கு இப்பேரணியில் பங்கேற்றால் பலனளிக்கும் என விஜய் கருதுவதாகவும் சொல்லப்படுகிறது. விஜய்யின் முயற்சி சரியா கமெண்ட் பண்ணுங்க.
News August 27, 2025
Tax Vs Tariff.. என்ன வித்தியாசம்?

USA-ன் வரிவிதிப்பு தொடர்பான செய்திகளில் ‘Tariff’ என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம். இந்நிலையில், இதற்கும் Tax-க்கும் என்ன வித்தியாசம் என்று தற்போது பார்க்கலாம். Tax என்பது அரசுக்கு வரி செலுத்துவோர் மீது விதிக்கப்படும் கட்டணம் ஆகும். இது நேரடி வரி, மறைமுக வரி என இரு வகைப்படும். Tariff என்பது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் ஆகும்.