News June 18, 2024

G-Pay இல் தவறாக பணம் எடுக்கப்பட்டதா?

image

இந்தியாவில் G-Payயை பயன்படுத்துவோர் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று, எதிர்முனைக்கு பணம் செல்லாதபோதும், வங்கிக் கணக்கில் பணம் எடுக்கப்பட்டிருப்பதாகும். பொதுவாக அந்தப் பணம் 3 முதல் 4 நாள்களுக்குள் திரும்பி செலுத்தப்படும். அப்படி கிடைக்கவில்லையெனில், 1-800-419-0157 எண்ணுக்கு போன் செய்தும், ‘Google Pay Help Center’ பக்கத்தில் புகாரை பதிவு செய்தும் பணத்தை திரும்பக் கோரலாம்.

Similar News

News March 19, 2026

விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரம்ஜானை முன்னிட்டு நாளை முதல் 3 நாள்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுவரை 20,000-க்கும் மேற்பட்டோர் சிறப்பு பஸ்களில் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். TNSTC செயலி (அ) இணையதளம் மூலம் இப்போதே டிக்கெட் புக் செய்து நெரிசலின்றி பயணம் செய்யுங்கள். SHARE IT

News March 19, 2026

ரயில்களில் தலையணை, பெட்ஷீட் திருடினால்..?

image

யாருக்கு தெரியப்போகுது என்று ரயிலில் பயணிக்கும் போது, தலையணை – பெட்ஷீட்களை திருடினால் என்ன தண்டனை தெரியுமா? ரயில்வே சொத்துச் சட்டம், 1966-ன் படி திருடிய பொருள்களுடன் முதல்முறையாக பிடிபட்டால், 1 வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ₹1,000 அபராதம் விதிக்கப்படும். 2017-18-ம் ஆண்டின் அறிக்கையின்படி, மேற்கு ரயில்வேயில் 1.95 லட்சம் துண்டுகள், 81,736 பெட்ஷீட்கள், 5,038 தலையணைகள் திருடு போயிருக்கிறதாம்.

News March 19, 2026

விஜய்க்கு கருப்புக்கொடி காட்டுவோம்: ரஜினி ரசிகர்கள்

image

அரசியலில் இருந்து ரஜினி பின்வாங்கியது குறித்து பேசிய <<19363014>>ஆதவ் அர்ஜுனாவிற்கு<<>> மதுரை ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக மிரட்டலால்தான் ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்கியதாக ஆதவ் அர்ஜுனா கூறியதற்காக விஜய் கண்டனமோ, வருத்தமோ இதுவரை தெரிவிக்கவில்லை என்றனர். இனியும் அவர் தெரிவிக்கவில்லை என்றால் பிரசாரத்துக்காக விஜய் மதுரை மேலூருக்கு வரும்போது கருப்புக்கொடி காட்டுவோம் என எச்சரித்துள்ளனர்.

error: Content is protected !!