News October 27, 2025
வீராங்கனைகள் மீதும் தவறு.. அமைச்சரின் சர்ச்சை கருத்து

இந்தூரில் ஆஸி., கிரிக்கெட் அணி வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதற்கு அவர்களே தான் காரணம் என்பது போல ம.பி., பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா பேசியுள்ளார். இந்த சம்பவத்தில் இருந்து அவர்கள் பாடம் கற்க வேண்டும் என்ற அவர், யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்றது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கிரிக்கெட்டர்கள் பிரபலமானவர்கள் என்பதால், அவர்கள்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Similar News
News October 27, 2025
SIR ஏன் நடத்தப்படுகிறது தெரியுமா? ECI விளக்கம்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஏன் மேற்கொள்ளப்படுகிறது என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். 1951 முதல் 2004 வரை 8 முறை மட்டுமே SIR நடத்தப்பட்டதாகவும், கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்னர் 2002 – 2004-ல் நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, தேர்தலுக்கு முன்பு வாக்காளர் சரிபார்ப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
BREAKING: அடுத்ததாக 12 மாநிலங்களில் SIR

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக ECI அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். முதற்கட்டமாக பிஹாரில் வெற்றிகரமாக SIR நடத்தப்பட்டதாகவும், 2-ம் கட்டமாக 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் SIR நடைபெற உள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் சரிபார்ப்பு மிக மிக அவசியம் என்றும் கூறியுள்ளார்.
News October 27, 2025
IND Vs SA: தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான, தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான அணியில் டெவால்ட் பிரெவிஸ், சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சென், ரபாடா, கேஷவ் மஹராஜ், ரியான் ரிக்கல்டன், எய்டன் மார்க்ரம் உள்ளிட்ட 15 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவ.14-ம் தேதி கொல்கத்தாவிலும், நவ.22-ம் தேதி கவுஹாத்தியிலும் நடைபெறவுள்ளது.


