News October 8, 2025
மல்யுத்த சாம்பியன் அமன் ஷெராவத் இடைநீக்கம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்தை இந்திய மல்யுத்த சம்மேளனம் ஒரு வருடத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளது. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப், 57 கிலோ எடைப்பிரிவில் அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1.7 கிலோ எடை கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக, அமன் ஷெராவத் அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி மல்யுத்த சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Similar News
News October 8, 2025
மின்மினியாக மினுக்கும் கீர்த்தி ஷெட்டி

தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகாமலேயே ரசிகர்களின் மனதில் கனவுக் கன்னியாக திகழ்பவர் கீர்த்தி ஷெட்டி. ஒவ்வொரு வாரமும் வித விதமாக போட்டோஷுட் நடத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் கீர்த்தி ஷெட்டி, இம்முறை நடத்திய போட்டோஷுட்டில் மின்மினி பூச்சி போல் மினுக்குகிறார். இந்நிலையில், தமிழில் இவர் நடித்துள்ள ‘LIK’, ‘ஜீனி’, ‘வா வாத்தியார்’ படங்களின் ரிலீசிற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.
News October 8, 2025
சிரப் விவகாரம்: 20 குழந்தைகள் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் சிரப் குடித்து உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில Dy.CM ராஜேந்திர சுக்லா தெரிவித்துள்ளார். நாக்பூர் ஹாஸ்பிடல்களில் ஆய்வு நடத்திய அவர், சிந்த்வாரா மாவட்டத்தில் மட்டும் இதுவரை 17 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாகவும், சிரப் குடித்தால் வாந்தி எடுப்பது, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக கூறியுள்ளார்.
News October 8, 2025
அக்டோபர் 8: வரலாற்றில் இன்று

*1922 – அறிவியலாளர் கோ. நா. இராமச்சந்திரன் பிறந்தநாள். *1932 – இந்திய விமானப்படை நிறுவப்பட்டது. *1935 – தடகள வீரர் மில்கா சிங் பிறந்தநாள். *1944 – நடிகை ராஜ்ஸ்ரீ பிறந்தநாள். *1987 – விடுதலைப் புலிகள் தாக்குதலில் இந்திய அமைதிப்படையின் 8 வீரர்கள் உயிரிழந்தனர். *2005 – 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் பாக்., இந்தியா, ஆப்கானில்., சுமார் 86,000 பேர் உயிரிழப்பு. *2020 – ராம் விலாஸ் பஸ்வான் மறைந்த நாள்.