News March 9, 2025
WPL: கடந்த முறை சாம்பியன்… இந்த முறை சறுக்கல்!

WPL தொடரில் நடப்பு சாம்பியன் ஆன பெங்களூரு அணி, இந்த முறை லீக் சுற்றுடன் நடையைக் கட்டியுள்ளது. டெல்லி, குஜராத், மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. லீக் சுற்றுடன் வெளியேறியது தொடர்பாக பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, இது நல்ல சீசனாக அமையும் என நினைத்தோம், ஆனால் கடைசி 5 போட்டிகள் நாங்கள் எதிர்பார்த்தது போன்று அமையவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.
Similar News
News July 11, 2025
மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

கீழடி அகழாய்வில் குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் கிடைக்கவில்லை என கூறிய PS ஸ்ரீராமனின் கருத்துகள் கண்டனத்திற்கு உள்ளானது. இதனிடையே, இவரிடம் 3-ம் கட்ட அகழாய்வு குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இதன் மூலம் மத்திய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். எனவே தனது நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News July 11, 2025
7.2 லட்சம் பேர்களுக்கு வீடு தேடி ரேசன் பொருள்கள் விநியோகம்

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடு தேடி சென்று ரேசன் பொருள்கள் வழங்கும் திட்டம் புதிதாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜூலையில் மட்டும் இதுவரை 7.2 லட்சம் பேரின் வீடுகளுக்கு வாகனங்களில் நேரில் சென்று ரேசன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களில் ஊழியர்கள் நேரில் சென்றபோது, 2.25 லட்சம் ரேசன் அட்டைதாரர்களின் வீடுகள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் அவர்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை.
News July 11, 2025
பேரிடர் நிவாரணமாக ₹1,066.80 கோடி வழங்க ஒப்புதல்

வெள்ளம் & நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிதியின் கீழ் ₹1,066.80 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அசாம் – ₹375.60 கோடி, மணிப்பூர் – ₹29.20 கோடி, மேகாலயா – ₹30.40 கோடி, மிசோரம் – ₹22.80 கோடி, கேரளா – ₹153.20 கோடி & உத்தராகண்ட் – ₹455.60 கோடி மத்திய அரசின் பங்காக வழங்கப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.