News March 15, 2025
WPL Final: டெல்லி அணிக்கு 150 ரன்கள் இலக்கு!

WPL ஃபைனலில் மும்பை, டெல்லி அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் தொடக்கம் முதலே விக்கெட்டுகள் சரிந்தன. பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 149 ரன்கள் குவித்துள்ளது. டெல்லி தரப்பில் மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எந்த அணி வெல்லும்? கமெண்ட்ல சொல்லுங்க
Similar News
News March 16, 2025
ரூ.350 நோட்டு வெளியீடா?

ரூ.200 தாள் நிறம் போல ரூ.350 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக படங்களுடன் சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இது உண்மையா என பிரபல செய்தி நிறுவனத்தின் உண்மை சரிபார்ப்பு குழு ஆய்வு செய்தது. அதில் அந்த செய்தி பொய்யான செய்தி என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரூ.350 நோட்டு தொடர்பாக வெளியாகும் செய்தியை நம்ப வேண்டாம் என்று மக்களை அக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
News March 16, 2025
திருச்செந்தூரில் பக்தர் உயிரிழப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறு விடுமுறை என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. அப்போது, ₹100 கட்டண வரிசையில் நின்றிருந்த காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் (50) மூச்சுத்திணறி கீழே சரிந்தார். மருத்துவமனை அழைத்துச் சென்றதில் அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.
News March 16, 2025
பிரேமலதா பேசத் தயங்குவது ஏன்?

அதிமுக கூட்டணியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு மாநிலங்களவை MP சீட் அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாக முன்பு செய்தி வெளியானது. ஆனால், எந்த வாக்குறுதியும் தரவில்லை என அதிமுக தலைமை தற்போது கூறிய நிலையில், அதற்கு தேமுதிகவினர் நேரடியாக எதிர்வினை ஆற்றவில்லை. 2026 தேர்தல் கணக்கா (அ) வேறு விஷயத்தால் பிரேமலதா பேசத் தயங்குகிறாரா என கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.