News February 17, 2025
WPL 2025: பெங்களூரு அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயம்

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு வெற்றிபெற டெல்லி அணி 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 19.3 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 141 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34, சாரா பிரைஸ்23 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணியின் ரேணுகா தாக்கூர் சிங், ஜார்ஜியா வேர்ஹாம் தலா 3 விக்கெட்டை வீழ்த்தினார்.
Similar News
News December 4, 2025
ஏன் Su-57 போர் விமானம்?

அண்டைய நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்க, இந்தியா ராணுவ தளவாடங்களை பலப்படுத்தி வருகிறது. அதன்படி, இந்தியா வரும் புடினுடன் Su-57 போர் விமானம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று ரஷ்யா செவ்வாயன்று உறுதிப்படுத்தி இருந்தது. ஏன் Su-57, இதனால் இந்தியாவுக்கு என்ன பலன் கிடைக்கும் உள்ளிட்ட தகவலை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News December 4, 2025
சற்றுமுன்: நாளை அனைத்து பள்ளிகளுக்கும்.. வந்தது உத்தரவு

பள்ளிக் கல்வியின் செயல்திட்டங்கள், மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆய்வு செய்யும் நோக்கில், இனி மாதந்தோறும் (5-ம் தேதிகளில்) அலுவல் கூட்டம் நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி, நாளை (டிச.5) அலுவல் ஆய்வு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறவுள்ளது. இதில், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலை, பள்ளி ஆண்டாய்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
News December 4, 2025
அமித்ஷாவுடன் அண்ணாமலை முக்கிய ஆலோசனை

அவசர பயணமாக டெல்லி சென்ற அண்ணாமலை, அமித்ஷாவை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாஜக தேசிய தலைவர் நட்டா, தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் உடன் இருந்துள்ளனர். OPS – அமித்ஷா சந்திப்பை தொடர்ந்து இந்த ஆலோசனை நடைபெறுவதால், NDA கூட்டணியில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


