News March 17, 2024
WPL: பெங்களூரு அணிக்கு 114 ரன்கள் இலக்கு

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான WPL இறுதிப் போட்டியில், பெங்களூரு அணிக்கு 114 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த டெல்லி அணி, தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி வந்தது. 8ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த பின்னர், அடுத்தடுத்த விக்கெட்டுகளை வரிசையாக பறிகொடுத்து 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பெங்களூரு அணி வெற்றி பெறுமா?
Similar News
News April 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 227 ▶குறள்: பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது.. ▶பொருள்: பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.
News April 5, 2025
சீனா பீதியடைந்துவிட்டது: டிரம்ப்

USA-வில் சீன இறக்குமதி பொருள்களுக்கு டிரம்ப் 34% வரி விதித்த நிலையில், சீனாவும் USA இறக்குமதிகளுக்கு அதே 34% கூடுதல் வரியை விதித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், சீனா தவறாக நடந்து கொண்டுவிட்டதாகவும், அவர்கள் பீதியில் இருப்பது வெளியில் தெரிவதாகவும் தெரிவித்துள்ளார். உலகின் பெரிய பொருளாதார வல்லரசு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் தொடங்கியுள்ளது.
News April 5, 2025
வக்ஃப் விவகாரம்: தர்ம சங்கடத்தில் நிதிஷ்குமார்

வக்ஃப் திருத்த மசோதாவை ஆதரித்ததால், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் JDU கட்சியின் இளைஞர் அணி துணைத்தலைவர் டாப்ரெஷ் ஹசன், கட்சியில் இருந்து விலகியுள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், இதுவரை 5 பேர் ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். அதேபோல் NDA கூட்டணி கட்சியான உ.பியின் ராஷ்டீரிய லோக் தளத்தில் இருந்தும் ஷாஜாய்ப் ரிஷ்வி என்ற நிர்வாகி விலகியுள்ளார்.