News January 20, 2026
WPL-ல் பாதியிலேயே விலகிய தமிழக வீராங்கனை

நடப்பு WPL-ல் தொடரில் இருந்து காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை ஜி.கமலினி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இடது கை சுழற்பந்துவீச்சாளர் வைஷ்ணவி சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக MI நிர்வாகம் அறிவித்துள்ளது. கமலினியின் காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 & ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Similar News
News January 22, 2026
தமிழக அரசு தோல்வி கண்டுவிட்டது: EPS

பிரதமர் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என EPS நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுமக்கள், பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பில்லை என சாடிய அவர், எல்லாதுறைகளிலும் திமுக அரசு தோல்வி கண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதுவரை இல்லாத வளர்ச்சியை தேர்தல் வெற்றிக்கு பின் தமிழ்நாட்டுக்கு அதிமுக வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News January 22, 2026
வெள்ளி விலை கிலோவுக்கு ₹5,000 குறைந்தது

<<18922286>>தங்கம்<<>> மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்து நகைப் பிரியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹5 குறைந்து ₹340-க்கும், கிலோ வெள்ளி ₹5,000 குறைந்து ₹3.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக வெள்ளியும் வரலாறு காணாத உச்சம் பெற்ற நிலையில், இன்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம், வெள்ளி வாங்க இதுதான் நல்ல சான்ஸ் என நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
News January 22, 2026
பிரேமலதாவுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு!

NDA கூட்டணி முழு வடிவம் பெற இன்னும் 24 மணிநேரமே இருக்கிறது. நாளை PM மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற அதிமுக-பாஜக மும்முரமாக செயல்படுகின்றன. தற்போது வரை தேமுதிகவும், புதிய தமிழகமும் தங்களது முடிவை அறிவிக்காமல் களத்திற்கு வெளியே உள்ளனர். இன்று புதிய தமிழகம் NDA-வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பிரேமலதா அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் மெளனம் காக்கிறார்.


