News September 5, 2025
Wow! அசத்தும் புது லுக்கில் ஹர்திக் பாண்ட்யா!

கிரிக்கெட் விளையாட்டில் அசத்துவது போலவே, அடிக்கடி தனது லுக்கை மாற்றி, அசத்தி விடுகிறார் ஹர்திக் பாண்ட்யா. வரும் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கவுள்ள ஆசிய கோப்பைக்காக, தனது தலை முடியை பொன் நிறத்தில் கலரிங் செய்து, வித்தியாசமான லுக்கில் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். ஹர்திக்கின் இந்த புதிய லுக் எப்படி இருக்கு.. கமெண்ட் பண்ணுங்க?
Similar News
News March 16, 2026
மயிலாப்பூரில் பிடிஆர் போட்டியா?

திமுக ஆட்சி அமைந்தபோது ஆக்டிவ்வாக இருந்த பிடிஆர், துறை மாற்றத்துக்கு பின் கட்சியில் இருந்து மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்டார். இருப்பினும் அவர், மதுரை மத்திய தொகுதியில் மீண்டும் போட்டியிட தீவிரமாக வேலை செய்து வருகிறார். ஆனால், அவர் அங்கு போட்டியிடுவதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது. இதனால், பிடிஆரை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாம்.
News March 16, 2026
அதிகாலையில் என்கவுன்டர்.. தமிழகத்தில் பரபரப்பு

சென்னை, மாதவரம் ரவுண்டானா பகுதியில் அதிகாலையில் நடந்த என்கவுண்டரில் ரவுடி தொப்பை கணேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஜன.30-ம் தேதி ₹25 லட்சம் பணம், 15 சவரன் நகை கொள்ளை தொடர்பான வழக்கில் கைது செய்ய முயன்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றபோது சுடப்பட்டதில் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. கணேஷின் உடல் சென்னை ஸ்டான்லி ஹாஸ்பிடலில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
News March 16, 2026
வேல்முருகனிடம் திமுக சமரச பேச்சுவார்த்தை

கூடுதல் சீட் , தங்களின் <<19389138>>10 கோரிக்கைகளை <<>>ஏற்றுக்கொண்டால் மட்டுமே திமுக கூட்டணியில் தொடருவோம்; இல்லையென்றால் 2 நாளில் கூட்டணி மாறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என <<19389138>>வேல்முருகன் <<>>கூறியிருந்தார். இதனையடுத்து, கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை தடுக்க திமுக தலைமை சார்பில் மூத்த அமைச்சர்கள் செல்போனில் அழைத்து வேல்முருகனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.


