News August 5, 2025
WOW! காலையில் உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி

காலையில் சீக்கிரமாக எழுபவர்களின் உற்பத்தித் திறனும் ஆற்றலும் அதிகமாக உள்ளதாக பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இவர்கள் ஆரோக்கியத்துடன் அதிக மகிழ்ச்சியாக, நாள் முழுதும் ஆற்றலுடன் இருப்பதுடன், இவர்களுக்கு மனநல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. ஆனால், தாமதமாக தூங்கி, காலையில் தாமதமாக எழுபவர்களுக்கு மனச்சோர்வுடன், சில மனநல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நீங்கள் எப்படி?
Similar News
News August 5, 2025
‘கூலி’ டைம் டிராவல் படமா? லோகி சொல்வதை கேளுங்க!

‘கூலி’ படத்தை சயின்ஸ் ஃபிக்சன், டைம் டிராவல் படமென ரசிகர்கள் சொல்வது தனக்கே வியப்பாக இருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். படம் எதைப்பற்றியது என ரசிகர்கள் பார்த்து ஆச்சரியப்படுவதை பார்க்கவே தான் ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நாகர்ஜுனாவிடம் 7 முறை கதை சொன்ன பின்னரே, அவர் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
வெள்ள சர்க்கரை என்றால் கொள்ள ஆசையா?

டீ, காபி என்றாலே வெள்ளை சர்க்கரையை கொஞ்சம் தூக்கலாக போட்டு கொள்ளும் பழக்கம் உள்ளவரா? வெள்ளை சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கானது. உடல் எடையை அதிகரிப்பதுடன், வெள்ளை சர்க்கரை இதயத்தையும் அதிகமாக பாதிக்கிறது. இவற்றுடன் புற்றுநோய், மனச்சோர்வு, கல்லீரல் கொழுப்பு போன்றவை ஏற்படும் அபாயமும் அதிகம். அடுத்தமுறை, ஒரு ஸ்பூன் தானே என சேர்க்கும் போது யோசிக்கவும்.
News August 5, 2025
விஜய்யின் அறிவிப்புக்காக காத்திருக்கும் தொண்டர்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளதாக கூறி தேதியை மாற்ற போலீசார் அறிவுறுத்தினர். இதனையடுத்து மாநாட்டை வரும் 18 முதல் 22-ம் தேதிக்குள் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. அதன்படி, மாநாட்டுக்கான தேதியை இன்னும் சற்று நேரத்தில் விஜய் அறிவிக்க உள்ளார்.