News October 24, 2024
Wow: வழுக்கை தலையில் முடி வளர்த்த நபர்..!

வழுக்கை தலையில் முடியை வளர்த்தது எப்படி என USA பணக்காரர் பிரையன் ஜான்சன் (46) பகிர்ந்துள்ளார். முடி உதிர்வு தொடங்கியதுமே சிகிச்சையை ஆரம்பித்ததாகவும், கடந்த ஓராண்டாக செய்த தொடர் முயற்சியால் தற்போது முடி வளர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனது மரபணுவுக்கு ஏற்றார்போல் புரதங்கள், Omega-3 கொழுப்பு அமிலங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுகள் முடி வளர உதவியதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
திரைப்பட விழாவில் கெத்து காட்டும் பாட்ஷா

‘ஐயா என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேரும் இருக்கு’ என்று பேசும் ரஜினியின் முகத்தில் தெரியும் மாஸே வேற லெவல் தான். அப்படிப்பட்ட ‘பாட்ஷா’ படம், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. இவ்விழாவில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் கெளரவிக்கப்படவுள்ள நிலையில், இத்திரையிடலும் அதில் இடம்பெற்றுள்ளது. பாட்ஷாவில் உங்களுக்கு பிடித்த சீன் எது?
News November 25, 2025
நவம்பர் 25: வரலாற்றில் இன்று

*பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women).
*1839 – ஆந்திராவில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியால் கொரிங்கா நகரம் முற்றிலும் சேதமடைந்தது. 30,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*2016 – பிடல் காஸ்ட்ரோ நினைவுநாள்.
News November 25, 2025
மே.வங்கத்தில் 10 லட்சம் SIR விண்ணப்பங்கள் நிராகரிப்பு

தமிழகத்தை போல் மே.வங்கத்திலும் SIR பணிகள் நவ.4 முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7.64 கோடி SIR விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 4.45 கோடி விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ECI தெரிவித்துள்ளது. இவற்றில் 10 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யவுள்ளதால், நிராகரிப்பு எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளதாம்.


