News April 7, 2025
வாவ் மோடிஜி வாவ்.. கார்கே கிண்டல்

கச்சா எண்ணெய் விலை 41% குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு பதிலாக, 2% கலால் வரியை மத்திய அரசு உயர்த்தி இருப்பதை ‘வாவ்’ என காங். தலைவர் கார்கே கிண்டல் அடித்துள்ளார். அரசாங்கம் கும்பகர்ண தூக்கத்தில் இருப்பதால், பங்குச்சந்தையில் ஒரே நாளில் ₹19 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சிலிண்டர் விலையையும் ஏற்றி காயத்தில் உப்பைத் தேய்க்க அரசு வந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News April 8, 2025
விஜய்க்கு ஏமாற்ற தெரியும், அரசியல் தெரியாது: தமிழிசை

சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசை விமர்சித்த விஜய்-க்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். ‘விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன?, பாமர மக்களுக்காக நடிக்கிறேன், குறைந்த விலையிலோ இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன்’ என இருக்க வேண்டியதுதானே, யார் தடுத்தார்கள் எனக் கூறிய அவர், விஜய்-க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும். அரசியலோ பொருளாதாரமோ தெரியாது என சாடினார்.
News April 8, 2025
கடன்களுக்கான வட்டியை குறைத்தது HDFC வங்கி

கடன்களுக்கான MCLR வட்டி விகிதத்தை 10 புள்ளிகள் வரை HDFC குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வருவதாக HDFC தெரிவித்துள்ளது. வட்டி குறைப்புக்கு பிறகு ஏற்கெனவே கடன் வாங்கியோருக்கான வட்டி விகிதம் 9.10% – 9.35% வரை இருக்கும் என்றும் HDFC குறிப்பிட்டுள்ளது. MCLR வட்டி விகிதம் என்பது முதலீட்டை அடிப்படையாக கொண்டு அளிக்கப்படும் கடன் மீது விதிக்கப்படும் வட்டியாகும்.
News April 8, 2025
அம்பேத்கரின் கூற்றை வாசித்து தீர்ப்பளித்த நீதிபதி

கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். TN அரசுக்கும், கவர்னருக்குமான இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பர்திவாலா, அண்ணல் அம்பேத்கரின் கூற்றை மேற்கோள் காட்டி தீர்ப்பை நிறைவு செய்துள்ளார். அந்த மேற்கோள் இதுதான், ‘‘அரசியலமைப்பு சிறப்பாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், அது மோசமானதாகவே இருக்கும்’’.