News April 4, 2025

₹23.75 கோடிக்கு Worth தான்…

image

ஏலத்தில் இவருக்கு போய், ₹23.75 கோடியா என விமர்சித்து, 3 மேட்ச்களில் கிண்டலடித்து வந்தவர்களுக்கு நேற்று வெங்கடேஷ் ஐயர் தகுந்த பதிலடி கொடுத்துவிட்டார். 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் விளாசி, சட்டென ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். போட்டி SRH கையில் இருந்து நழுவி போக முக்கிய காரணம் வெங்கடேஷ் ஐயர் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Similar News

News April 7, 2026

மன அழுத்தமும் பற்களை பாதிக்கும்!

image

சர்க்கரை உணவுகளை சாப்பிடுதல், புகைப்பிடித்தல் ஆகியவற்றுடன் மன அழுத்தமும் வாய் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என டாக்டர்கள் கூறுகின்றனர். மன அழுத்தமானது தூக்கத்தின்போது பற்களை நறநறவென தேய்க்க வழிவகுக்கும்; இது பற்களின் எனாமலை தேய்வடைய செய்யும். அதேபோன்று சர்க்கரை நிறைந்த உணவுகள் பற்களை பாதிக்கும். புகைபிடிப்பதால் வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

News April 7, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் 7, பங்குனி 24 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:00 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News April 7, 2026

ஆப்கானின் சோகத்தில் கைகொடுக்கும் இந்தியா

image

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண உதவிகளை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இதில் சமையல் பொருள்கள், மருந்துகள், தார்ப்பாய்கள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் உள்ளதாகவும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா துணை நிற்பதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!