News October 15, 2024

காதல் கைகூட செய்ய வேண்டிய வழிபாடு!

image

நம் வாழ்வின் தேவைகளை இறை ஆற்றலிடம் வேண்டிப் பெறுவது போலக் காதலையும் வேண்டிப் பெறலாம். காதல் கைகூட காதற் கடவுளர்களான ரதி – மன்மதனை வணங்க வேண்டுமென சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் உள்ள மன்மதனின் சிலைக்கு பெண்களும், ரதியின் சிலைக்கு ஆண்களும் மஞ்சள் – குங்குமம் அபிஷேகம் செய்து வழிபட, காதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

Similar News

News August 17, 2025

டிரம்ப் வரிவிதிப்பு: 50 நாடுகளை குறிவைக்கும் இந்தியா

image

வர்த்தகத்திற்கு அமெரிக்காவை மட்டும் சார்ந்து இருக்க கூடாது என்பதற்காக, இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 50 நாடுகளில் ஏற்றுமதியை விரிவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 90 சதவீதமாகும். இந்திய பொருள்களுக்கு டிரம்ப் 50% வரிவிதித்த நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

News August 17, 2025

திருமண விஷயத்தில் சச்சினை ஃபாலோ பண்ணும் மகன்!

image

அர்ஜுன் டெண்டுல்கர் – சானியா சந்தோக் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. தற்போது அவர்களின் வயது வித்தியாசம் பேசுபொருளாகியுள்ளது. 1999 செப்., 24-ம் தேதி அர்ஜுன் பிறந்த நிலையில், சானியா 1998 ஜூன் 23-ம் தேதி பிறந்துள்ளார். அதன்படி, அர்ஜுனை விட சானியா ஒரு வயது மூத்தவர். சச்சின் தன்னை விட 5 வயது மூத்த அஞ்சலியை திருமணம் செய்த நிலையில், அவரது மகனும் அப்பாவை ஃபாலோ பண்ணுவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

News August 17, 2025

துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

image

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென அப்பதவியில் இருந்து விலகினார். இதனால், வரும் 9-ம் தேதி அப்பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், NDA கூட்டணி சார்பில், மகாராஷ்டிரா கவர்னராக உள்ள ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் PM மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு JP நட்டா அறிவித்துள்ளார்.

error: Content is protected !!