News April 3, 2025

சிறுமிகளின் பிறப்புறுப்புக்கு பூஜை… ஷாக்கிங் வீடியோ (1/2)

image

உ.பி. சம்பலில் சிக்கிய போலி மாந்திரீகர்களிடம் இருந்து அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஏழைகளே அவர்களது குறி. உங்கள் வீட்டில் இருக்கும் சிறுமிக்கு மாந்திரீக பூஜை செய்தால் பணம் கொட்டும் என பெற்றோரிடம் ஆசை காட்டி அந்த கும்பல் அத்துமீறியுள்ளது. தனியறையில் சிறுமியின் அந்தரங்க உறுப்பை வணங்கி பூஜை நடக்குமாம். அதன்பிறகு அவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

Similar News

News March 26, 2026

பொன்முடிக்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை

image

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும்படி, பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் சம்மன் அனுப்பி இருந்தது. இதை எதிர்த்து அவரது தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணைக்கும் பொன்முடி நேரில் ஆஜராவதற்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

News March 26, 2026

அதிமுகவுடன் கூட்டணி.. கடைசியாக அறிவித்தார்

image

NDA கூட்டணியில் புதிதாக சிங்கத் தமிழர் கட்சி இணைந்துள்ளது. இன்று அக்கட்சியின் தலைவர் ஆர்.வி.பரதன் EPS-ஐ சந்தித்து முழு ஆதரவை தெரிவித்த நிலையில், அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பரதன் மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் ஆகிய 2 தொகுதிகளில் ஒன்றை ஒதுக்க கேட்டிருப்பதாகவும், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

இந்தியாவை நோக்கி வரும் 8 லட்சம் மெட்ரிக் டன் LPG

image

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு பற்றிய வதந்திகளை நம்பி பங்க்குகளில் பொதுமக்கள் திரளவேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கான கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா உறுதி செய்திருப்பதாகவும், US, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து 8 லட்சம் மெட்ரிக் டன் LPG கப்பல்கள் மூலம் வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!