News September 14, 2024
நோயற்ற வாழ்வை அருளும் ஏகாதசி வழிபாடு

திருப்பாற்கடலில் இருந்து அமிர்தம் வெளிப்பட்ட ஏகாதசித் திருநாளில் திருமாலை வணங்கினால் கோடி நன்மைகள் வந்து சேரும் என்பது வைணவக்குரவர்கள் கூற்று. சிறப்பு வாய்ந்த சர்வ ஏகாதசியான இன்று காலையிலேயே குளித்து, திருமண் இட்டு, பெருமாளுக்கு விரதமிருந்து, மாலை கோயிலுக்குச் சென்று விஷ்ணுவுக்கு துளசி மாலை சாற்றி, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் பாடி, நெய் தீபமேற்றி வணங்கினால், நோயற்ற வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.
Similar News
News January 22, 2026
கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது: SC

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனவும், இதில் தலையிட்டு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்றும் SC தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என தொடரப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக SC உத்தரவின்பேரில் CBI விசாரணை நடத்தி வருவது கவனிக்கத்தக்கது.
News January 22, 2026
தமிழக அரசு தோல்வி கண்டுவிட்டது: EPS

பிரதமர் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என EPS நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுமக்கள், பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பில்லை என சாடிய அவர், எல்லாதுறைகளிலும் திமுக அரசு தோல்வி கண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதுவரை இல்லாத வளர்ச்சியை தேர்தல் வெற்றிக்கு பின் தமிழ்நாட்டுக்கு அதிமுக வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News January 22, 2026
வெள்ளி விலை கிலோவுக்கு ₹5,000 குறைந்தது

<<18922286>>தங்கம்<<>> மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்து நகைப் பிரியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹5 குறைந்து ₹340-க்கும், கிலோ வெள்ளி ₹5,000 குறைந்து ₹3.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக வெள்ளியும் வரலாறு காணாத உச்சம் பெற்ற நிலையில், இன்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம், வெள்ளி வாங்க இதுதான் நல்ல சான்ஸ் என நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


