News October 1, 2025
சரஸ்வதி பூஜையில் இப்படி வழிபாடு பண்ணுங்க!

ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் வைத்து அருகம்புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். புத்தகங்களை மேஜையின் மேல் அடுக்கி வைக்கவும். படத்தின் முன் ஒரு இலை விரித்து, அதில் வெற்றிலை பாக்கு, பழம், பொரி ஆகியவற்றைப் படைத்து, நெய் தீப வழிபாடு செய்ய வேண்டும். மறுநாள் காலையில் புதிதாக இலை போட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜையை நிறைவு செய்த பின் சரஸ்வதி படத்தை எடுத்து விட வேண்டும். SHARE.
Similar News
News March 15, 2026
காஞ்சி: போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. 8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 15, 2026
தேர்தல் நேரத்தில் விஜய்க்கு சிக்கல்

ஏப்.23-ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், விஜய்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தவெகவின் ஒற்றை முகமாக திகழும் அவர், இறுதிக்கட்ட பரப்புரையை தவறவிடும் சூழல் எழுந்துள்ளது. சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கில் ஏப்.20-ல் ஆஜராக செங்கல்பட்டு கோர்ட் விஜய்க்கு உத்தரவிட்டுள்ளது. இது தவெகவின் கடைசிக்கட்ட தேர்தல் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய்க்கு விலக்கு கிடைக்குமா?
News March 15, 2026
தேர்தல் விதிமீறல்.. cVIGIL செயலியில் புகார் கொடுங்க!

சிவிஜில் (cVIGIL) என்பது தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகாரளிப்பதற்கு ECI உருவாக்கிய செயலி ஆகும். இதில் அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வது, பரிசுப் பொருள்கள் வழங்குவது, அனுமதித்த நேரத்தை மீறி பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் புகாரளிக்கலாம். எந்தவொரு விதிமீறலாக இருந்தாலும், அதுபற்றிய போட்டோ, வீடியோ, ஆடியோவை ஆதாரமாக பதிவேற்றி புகார் தெரிவிக்கலாம்.


